அன்புத் தோழர்களுக்கு வணக்கம் .
எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின், 50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, இடைக்கால நிவாரணம் வழங்குதல் , GDS ஊழியர்களையும் ஊதியக் குழு வரம்புக்குள் கொண்டுவருதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளின் மீதான 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டிட நமது அஞ்சல் சம்மேளனங்களான NFPE மற்றும் FNPO ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன .
இது குறித்து தமிழக அஞ்சல் - RMS - MMS - GDS அமைப்புகளின் NFPE மற்றும் FNPO மாநிலச் செயலர்களின் JCA ஆலோசனைக் கூட்டம் நாளை 17.01.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற உள்ளது . இதில் தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் .
மேலும் எதிர்வரும் 03.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் சென்னை CPMG அலுவலக வளாகத்தில் உள்ள MEETING HALL இல் நமது JCA சார்பாக வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது . இதில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரும் நமது பொதுச் செயலருமான தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு வேலை நிறுத்த உரை ஆற்றிட உள்ளார்கள் என்பதையும் முன் கூட்டியே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் .
சென்னை நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள் இந்தக் கூட்டத்தின் தவறாமல் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் !
இதர ஏற்பாடுகள் குறித்து நாளைய JCA கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அறிவிப்பு செய்யப் படும் .