Friday, September 12, 2014

DECISIONS OF THE TN CONFEDERATION MEETING HELD ON 09.09.2014

தமிழக மத்திய அரசு ஊழியர் மகா   சம்மேளனக் கூட்டத்தின் முடிவுகள் 

தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் ஆலோசனைக்  கூட்டம் கடந்த 09.09.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் சென்னை   தேனாம் பேட்டை  ACCOUNTANT GENERAL  அலுவலக வளாகத்தில் அதன் மாநிலத் தலைவர் தோழர். J . இராம மூர்த்தி அவர்கள் தலைமையிலும் , பொதுச் செயலாளர் தோழர். M.துரைபாண்டியன்  அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நம்முடைய மகா சம்மேளனத்தின் FEDERAL  SECRETARIAT  முடிவின்படி, 

1. முதற்கட்டமாக  11.09.2014 அன்று நம்முடைய  12 அம்சக் கோரிக்கை மனுவினை, ஆர்ப்பாட்டம் நடத்தி அந்தந்த துறை மூலம்  CABINET  SECRETARY க்கு அனுப்பிடுவது எனவும் ,  

2. இரண்டாவது கட்டமாக எதிர்வரும் 19.09.2014 அன்று அறிவிக்கப் பட்டுள்ள நாடு தழுவிய  தார்ணா  போராட்டத்தை  தமிழகத்தின் தலைநகரான சென்னையில்  'சாஸ்திரிபவன்'  வளாகத்தில்  சிறப்பாக நடத்துவது எனவும், இது தவிர கோவை , மதுரை, திருச்சி போன்ற பெரு  நகரங்களிலும் இதே தேதியில் ஆங்காங்கே உள்ள மாவட்ட அமைப்புகள் மூலம்  தார்ணா போராட்டம் நடத்திடுவது எனவும் ,

3. மூன்றாவது கட்டமாக , எதிர்வரும் 25.09.2014 அன்று புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற உள்ள பெருந்திரள்  தார்ணா  போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொள்வது எனவும் முடிவெடுக்கப் பட்டது.

கூட்டத்தில் வருமான வரித்துறை, சாஸ்திரிபவன் அலுவலக ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு , ராஜாஜி பவன் அலுவலக ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு , சிவில் அக்கவுண்ட்ஸ் , கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர் சங்கம், அஞ்சல் துறை , CGHS , AG 'S  OFFICE  உள்ளிட்ட பகுதிகளின்  மத்திய அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு  ஆலோசனை வழங்கினார்கள். 

அன்புத் தோழர்களே ! அஞ்சல்  RMS  பகுதிகளில் , சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து  கோட்ட/கிளைச் செயலர்களும்  எதிர்வரும் 19.09.2014 அன்று விடுப்பெடுத்துக் கொண்டு  அவரவர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் உறுப்பினர்களுடன் சாஸ்திரி பவன் அலுவலக வாயிலில் நடைபெறும்  இந்த தார்ணா  போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு  நமது தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பிலும், தமிழக அஞ்சல் RMS  ஊழியர் சங்கங்களின் சார்பிலும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

கோரிக்கைகள் 

1. Merger of DA with pay for all employees w.e.f. 01.01.2014 including Gramin Dak Sewaks and Pensioners.
2. Grant of Interim Relief to all employees including Gramin Dak Sewaks and Pensioners.
3. Inclusion of Gramin Dak Sewaks under the purview of 7th Central Pay Commission
4. Scrap PFRDA Act and grant statutory defined pension to all including those appointed on or after 01.01.2004.
5. Date of effect of 7th CPC recommendation should be 01.01.2014.
6. Regularisation and Revision of wages of casual labourers and contract workers.
7. Removal of 5% condition for compassionate appointment.
8. Fill up all vacant post and creation of New Post wherever justified.
9. Stop Downsizing, Outsourcing, Contractorisation and Privatisation of Government function.
10.Grant productivity Linked Bonus to all without ceiling; Compute bonus as weighted average of PLB for those not covered by PLB agreement.
11.Revise OTA and NDA and implement arbitration awards.
12.Settle all pending anomalies of 5th and 6th Pay Commission.