தமிழக NFPE அஞ்சல் - RMS இணைப்புக்
குழுக் கூட்டத்தின் முடிவுகள்
கடந்த 10.09.2014 அன்று மாலை சுமார் 06.000 மணியளவில் சென்னை பூங்கா நகர் தலைமை அஞ்சலக வளாகத்தில் தமிழக NFPE இன் அஞ்சல் - RMS இணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் தோழர். K . சங்கரன் அவர்கள் தலைமையிலும் , கன்வீனர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீவி , அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன், RMS நான்கின் மாநிலச் செயலர் தோழர். B . பரந்தாமன், அதன் மாநிலத் தலைவர் தோழர். தேவன், கணக்குப் பிரிவு சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சந்தோஷ்குமார், அதன் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ் , SBCO சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். கார்த்திகேயன் , அதன் முன்னாள் மாநிலச் செயலர் தோழர் அப்பன்ராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். S . ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் :-
1. எதிர்வரும் 19.09.2014 அன்று சாஸ்திரி பவன் அலுவலக வாயிலில் நடைபெற உள்ள மகா சம்மேளனத்தின் தார்ணா போராட்டத்தில் NFPE இன் அனைத்து உறுப்புச் சங்கங்களிளிருந்தும் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை பெருநகரத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களுடன் பெரும்பான்மையான ஊழியர்கள் கலந்து கொள்வது எனவும் ,
2. எதிர்வரும் 24.09.2014 அன்று மத்திய JCA (NFPE /FNPO) முடிவினை அமல் படுத்தும் வகையில், இரண்டாவது கட்டமாக , சென்னை பெருநகரக் கிளைகள் நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தார்ணா போராட்டத்தை சிறப்பாக நடத்திட தாக்கீது அனுப்புவது எனவும்,
3. எதிர்வரும் 24.09.2014 அன்று தமிழக JCA சார்பில் CHIEF PMG அலுவலக வளாகத்தில் பெருந்திரள் தார்ணா சிறப்பாக நடத்துவது என்றும் , அதில் சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து அஞ்சல் RMS பகுதிச் சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட/ கிளைச் செயலர்கள், முன்னணித் தோழர்கள் அனைவரும் விடுப்பெடுத்து முழுமையாகக் கலந்துகொண்டு சிறப்பிப்பது எனவும் ,
4. எதிர்வரும் 09.11.2014 அன்று சென்னை தி. நகர், ஜெர்மன் ஹாலில் தமிழக அஞ்சல் - RMS இணைப்புக் குழு சார்பில் நமது சம்மேளனத்தின் வைரவிழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடுவது எனவும்,
5. இதில் நமது சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர்கள் தோழர். ஞானையா , தோழர். K .R ., அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் தோழர் K.V.S., மற்றும் தமிழகத்தில் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு , கணக்குப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, சங்கங்களில் பணியாற்றி ஒய்வு பெற்றிருக்கும் தோழர்கள் . A .G . பசுபதி, N . பாலு, K . சிவராமன்
M . கண்ணையன் உள்ளிட்ட முன்னாள் மாநிலச் செயலர்கள் , முன்னாள் மாநிலத் தலைவர்கள் அனைவரையும் வைரவிழா நிகழ்வில் அழைத்து கௌரவிப்பது எனவும் ,
6. இதற்கான வரவேற்புக் குழுவின் தலைவராக தோழர். K . சங்கரன் அவர்களையும் , வரவேற்புக் குழுவின் பொதுச் செயலராக தோழர்.
J . இராமமூர்த்தி அவர்களையும் , வரவேற்புக் குழுவின் நிதிச் செயலராக தோழர். R . B . சுரேஷ் அவர்களையும், அதன் உறுப்பினர்களாக தமிழக NFPE அமைப்பின் உறுப்புச் சங்கங்களின் அனைத்து, சம்மேளன, மத்திய சங்கங்களின் , மாநிலச் சங்கங்களின் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பது எனவும் ,
7. இந்த விழாவுக்கான நிதி ஆதாரத்தை , தமிழகம் முழுவதும் அனைத்து கோட்ட/ கிளைகளிலிருந்தும் பெறுவது எனவும் , அதற்கான நிதிக் குழுவின் பொதுச் செயலராக தோழர். S . அப்பன்ராஜ் அவர்களை நியமிப்பது எனவும் ,
8. மேலும் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முழுமையான வரவேற்புக் குழு அழைக்கப்பட்டு விரிவான ஆலோசனைகள் பெற்றும் விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது எனவும் முடிவுகள் எடுக்கப் பட்டது .
இந்த முடிவுகளை அமல்படுத்துவதில் தமிழக NFPE இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொறுப்பு உள்ளது . தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அனைத்து நிர்வாகிகளும் வைர விழா நிகழ்வில் தவறாமல் கலந்துகொண்டு , ஒய்வு பெற்ற அத்துணை தலைவர் களையும் ஒரே மேடையில் அமர்த்தி கௌரவிக்கப்படும் வரலாற்று நிகழ்வில் தங்களையும் உள்ளடக்கிக் கொண்டு சிறப்பு பெறுமாறு அன்போடு வேண்டுகிறோம். இது குறித்த விபரங்கள் தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழு மூலம் சுற்றறிக்கையாக வெளியிடப்படும்.
19.09.2014 மற்றும் 24.09.2014 போராட்டங்களில் சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டிடுமாறு மீண்டும் வேண்டுகிறோம்.
24.09.2014 தார்ணா போராட்டத்தை தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் JCA சார்பாக மிகச் சிறப்பாக நடத்தி அதன் நோட்டீஸ் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிடுமாறு வேண்டுகிறோம்.
வாழ்த்துக்களுடன்,
NFPE அஞ்சல் - RMS இணைப்புக் குழு ,
தமிழ் மாநிலம் , சென்னை 600 005.