தென் மண்டலத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 25.11.2014 அன்று தென் மண்டல PMG அவர்களுடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி நடைபெற்றது . அதில் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும் தென் மண்டலச் செயலர் தோழர் தியாகராஜ பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டார்கள். அதன் விபரம் வருமாறு :-
1. மண்டல அலுவலகத்தில் நீண்ட காலமாக DEPUTATION இல் உள்ள மதுரை கோட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் திருப்பப் பட வேண்டும்.
பதில்: நீண்ட காலம் DEPUTATION உள்ள ஊழியர்கள் திருப்பப்படுவார்கள். மதுரை கோட்டத்தின் SHORTAGE ஐ சரி செய்ய DEPUTATION பல கோட்டங்களில் இருந்தும் சமன் செய்யப்படும். மேலும் மதுரை கோட்டத்திற்கு TEMPORARY TRANSFER விண்ணப்பித்துள்ள ஊழியர்கள் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப் படும்.(இந்தப் பிரச்சினை FOUR MONTHLY MEETING லும் வைக்கப் பட்டுள்ளது )
2. திண்டுக்கல் கோட்டத்தில் தொழிற்சங்கங்களின் அறிக்கை பலகைகள் வேறு இடத்திற்கு தன்னிச்சையாக மாற்றப்பட்டது திரும்பப் பெற வேண்டும்.
பதில் : உடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.( இந்தப் பிரச்சினை எதிர்வரும் நன்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியிலும் CPMG அவர்களிடம் வைக்கப் பட்டுள்ளது )
3.திருநெல்வேலி கோட்டத்தில் 5000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதியில் உள்ள 'நாலுமுக்கு' துணை அஞ்சலகம் RELOCATE செய்யப் படவேண்டும் . அந்தப் பகுதியில் கிளை அஞ்சலகம் துவக்கப் பட வேண்டும்.
பதில் :- ஏற்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
4. CBS பயிற்சி முடித்த ஊழியர்களுக்கு PASS WORD ALLOT செய்யாததால்
ஏற்கனவே பயிற்சி முடித்த மூத்த தோழர்கள் DEPUTATION செய்யப் படுகிறார்கள். உ-ம் விருதுநகர் கோட்டம். மேலும் CBS பயிற்சி முடித்தவர்களை CIS பயிற்சிக்கு அனுப்புதல் நிறுத்தப் படவேண்டும்.
பதில் : உடன் நடவடிக்கை எடுக்கப் படும்.TRAINING முடித்த அனைத்து ஊழியர்களுக்கும் PASS WORD வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.
இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி முடிந்த வுடன் PMG, SR அவர்களுடன் மாலையில் INFORMAL MEETING சுமார் 1.30 மணி நேரம் நடை பெற்றது. இதில் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும் மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள். பேட்டி சுமூகமாக நடைபெற்றது..
தென் மண்டலத்தில் ஊழியர்கள் பிரச்சினைகளில் முழு அக்கறை காட்டப் படும் என்றும் , நிர்வாகத்துடன் தொழிற் சங்கத்திற்கு சுமூக உறவு வேண்டும் என்றும் PMG, SR அவர்கள் வேண்டினார்.
இதில் பேசப்பட்ட பிரச்சினைகள் :-
1. மதுரை கோட்டத்தில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகள் ஏற்கனவே மாநிலச் சங்கத்தால் எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவைமீது உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்படும்.
மதுரை கோட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள முது நிலைக் கண்காணிப்பாளருக்கு இது குறித்து அறிவுறுத்தப்படும். கோட்டச் செயலர் உடன் SSPஐ சந்தித்து பிரச்சினைகள் குறித்து பேசிட அறிவுறுத்தப் பட்டுள்ளார்.
2. திண்டுக்கல் தலைமை அஞ்சலக அலுவல் நேரம் மாற்றப்பட்டது திரும்பப் பெற வேண்டும்.
உடன் இது குறித்து கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப் படும்.
3. திண்டுக்கல் கோட்டத்தில் அக்டோபர் மாதமே அறிவிக்கை செய்யப் பட்டுள்ள முறைகேடான RT -2015 ரத்து செய்யப் பட வேண்டும்.
இந்த உத்திரவு அமல் படுத்தப்பட மாட்டாது. முது நிலைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தப் படுவார்.
4. மதுரை கோட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான தோழர். செல்லத்துரை , PM GRADE I இடமாற்றம் குறித்து
அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டு விரைவில் சாதகமான உத்திரவு அளிக்கப் படும்.
5. தேனீ கோட்டத்தில் ஒரு சில ஊழியர்களுக்கு முறை கேடாக அளிக்கப்பட்டுள்ள அதீதமான சலுகைகள் குறித்து .
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
6. தேனீ கோட்டத்தில் பழுதடைந்த்ள்ள PRINTER மற்றும் கணினி உப பொருட்கள் மாற்றம் செய்திட வேண்டும்.
உடன் இது குறித்து அறிக்கை பெற்று , PERIPHERALS புதிதாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.