Friday, July 3, 2015

CIRCLE UNION ON TRADE UNION VICTIMISATION AT MADURAI REGION

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  கடந்த  30.06.2015 அன்று மதுரை மண்டல நெறியாளர்  திருமதி . நிர்மலாதேவி அவர்களை  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் சந்தித்து பேசிய  நேர்காணல் விபரங்கள்  முந்தைய வலைப் பதிவில் அளித்திருந்தோம் . அதன்படி  மதுரை மண்டல அலுவலகத்திலிருந்து DEPUTATION  இல் சென்ற  மொத்தம் 24  ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விபரம்  தெரிவித்திருந்தோம்.

மேலும்  கடந்த 10.01.2014 மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற  NFPE COC  யின் தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு நிர்வாகத்தால் பழிவாங்கப் பட்ட ஊழியர்களுக்கு  வழங்கப் பட்ட DIES NON நமது CPMG  அவர்களின் தலையீட்டின் பேரில்  ரத்து செய்திட முடிவெடுக்கப்பட்டதும் ,  ஏற்கனவே  நான்கு ஊழியர்களுக்கு  இதற்கான உத்திரவு அளிக்கப் பட்டிருப்பது குறித்தும்  தெரிவித்திருந்தோம். 

தற்போது  மதுரை  மண்டல நிர்வாகத்துடன்  மாநிலச் செயலர் தொடர்பு கொண்டு பேசியதில்  கீழ்க் காணும் ஊழியர்களின்  DIES NON  ரத்து செய்யப் பட்டு  இன்று உத்திரவு அளிக்கப் பட்டுள்ளதாக   மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோழர்கள் 
1. K . சங்கர் ,   P..A. , TALLAKULAM HO
2. சிவகுருநாதன் ,  P.A., TALLAKULAM HO
3. S.  சந்திரசேகரன் , P.A., MADURAI HO
4. S. கிருஷ்ணமுர்த்தி , P..A., TALLAKULAM HO
5. S. குணசேகரன் , POSTMAN , MADURAI HO

மேலும்  உள்ள மேல் முறையீடுகளின் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  நமக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேல் முறையீடுகளின் மீது   தண்டனையை ரத்து செய்து உத்திரவிட்டுள்ள மதுரை மண்டல நெறியாளர்  திருமதி. நிர்மலாதேவி  அவர்களுக்கும் , இந்த  பிரச்சினையில் தலையிட்டு  தீர்வுக்கு  வழி வகுத்த  நமது  CPMG திரு. சார்லஸ்  லோபோ  அவர்களுக்கும்  நம்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மதுரை மண்டலம் அமைதி மண்டலமாக மாறிட இந்த  முயற்சிகள்  முன்னோட்டமாக அமைந்து வருகின்றன .  இனி  ஊழியர்  பிரச்சினைகளில்  நல்ல முன்னேற்றங்கள் ஏற்படட்டும்.