Friday, July 17, 2015

DIVISIONAL CONFERENCES TIRUVANNAMALAI , THANJAVUR AND MADURAI PSD

              திருவண்ணாமலை அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு 


கடந்த 28.06.2015 அன்று  திருவண்ணாமலை அஞ்சல் மூன்றின் கோட்ட மாநாடு திருவண்ணாமலை தலைமை அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS . சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு  சிறப்பித்தனர் .  நடப்பு ஈராண்டு காலத்திற்கு  கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகளின் பணி  சிறக்க நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !

தலைவர்                          :  தோழர்.  P . பாலு,  P.A., TVM HO
கோட்டச் செயலர்       :   தோழர். K . பிச்சாண்டி ,  APM, TVM HO.
நிதிச் செயலர்               :    தோழர். B . ரஞ்சித் , LRPA,  TVM  HO 

                                                மதுரை PSD  கிளை  மாநாடு 

மதுரை PSD  கிளையின் மாநாடு கடந்த 30.06.2015  அன்று  மதுரை PSD வளாகத்தில் நடைபெற்ற அறிவிப்பு கிடைத்தது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் நடப்பு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். அவர்களின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின்  அன்பான வாழ்த்துக்கள் !

தலைவர்                         :  தோழர். C . அண்ணாதுரை 
செயலர்                                    :   தோழர்.  C . முத்தையா 
நிதிச் செயலர்              :   தோழர் . B . சந்திரசேகரன் 

தஞ்சாவூர் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு 

தஞ்சை அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின் 41 ஆவது கோட்ட மாநாடு கடந்த 28.6.2015  அன்று  தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது . மாநாட்டில்  அஞ்சல் மூன்று மாநிலச்செயலர் தோழர். J .R .,
மத்திய மண்டலச் செயலர் தோழர். R . குமார் , பாபநாசம் கிளைச் செயலர் தோழர். லெனின் , தலைவர் தோழர். குணசீலன் , மன்னை  கிளைத் தலைவர் தோழர். சீலன்ராஜ்,  மன்னை  கிளைச் செயலர் தோழர். சேதுராமன் , மயிலாடுதுறை கோட்டச் செயலர் தோழர் . K . துரை , கோட்டத் தலைவர் தோழர்.  P . ரவிச்சந்திரன்  உள்ளிட்ட  அஞ்சல் நான்கு மற்றும்  GDS  சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித் தனர். மாநாட்டில் நடப்பு ஈராண்டு காலத்திற்கு  கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பணி  சிறக்க நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !

தலைவர்                         :  தோழர்  . M . ராஜேந்திரன் 
கோட்டச் செயலர்      :  தோழர். S.செல்வகுமார் 
நிதிச் செயலர்              :  தோழர். நீலவண்ணன் யாதவ் 

நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள்