மாநில தலைமையகத்து முக்கிய செய்திகள்
1. நம்முடைய மாநிலச் சங்கத்திற்கு, கடந்த 09.07.2015 இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின்போது உறுதி அளித்தபடி மேற்கு மண்டல அலுவலகத்தில் இருந்து DEPUTATION இல் நீண்ட காலமாக இருந்து வந்த எட்டு ஊழியர்களை கடந்த 13.07.2015 அன்று மேற்கு மண்டல PMG அவர்கள் திருப்பி அனுப்பினார். இதில் ஏழு பேர் கோவை கோட்டத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது நமது மாநிலச் சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
2. நம்முடைய மாநிலச் சங்கத்தின் தீவிர முயற்சி காரணமாக நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த LSG பதவி உயர்வு தற்போது வழங்கப்பட உள்ளது. நம்முடைய அகில இந்திய சங்கத்தின் முயற்சியால் இது குறித்த விளக்கம் DTE ஆல் CPMG அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் LSG பதவி உயர்வு அளிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது . இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாத 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். மேலும் RESULTANT ஆக எழுத்தரில் பதவி உயர்வின் மூலம் உண்டாகும் காலியிடங்கள் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3 எதிர்வரும் 18.07.2015 அன்று புதுக்கோட்டை நகரில் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் 37 ஆவது மாநில மாநாடு நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைக்கப் பட உள்ளது. இதற்கான கூட்டம் புதுகை தலைமை அஞ்சலகத்தில் 18.07.2015 மதியம் நடைபெறும். மாநிலச் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் , அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு மாநிலச் சங்கத்தின் சார்பில் வேண்டுகிறோம்.
4. இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி மதுரை மண்டலத்தில் 20.07.2015 அன்றும் மத்திய மண்டலத்தில் 30.07.2015 அன்றும் நடைபெற உள்ளன.
5. நான்கு மாதங்களுக்கு ஒரு முறையில் CPMG அவர்களுடன் நடைபெறும் FOUR MONTHLY MEETING நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 21.07.2015அன்று CPMG அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் தேங்கிக் கிடக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் படும்.
6. நம்முடைய மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சியால் , நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த RJCM கூட்டம் எதிர்வரும் 06.08.2015 அன்று மதியம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான SUBJECTS உடனடியாக கோரப்பட்டுள்ளது. எனவே மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/ கிளைச் செயலர்கள், முன்னணித் தோழர்கள் மாநில கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எடுத்துச் செல்லும் வண்ணம் தகுதி பெற்ற முக்கிய பொதுப் பிரச்சினைகளை மாநிலச் சங்கத்திற்கு EMAIL மூலம் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்குமாறு அவசரமாக வேண்டப்படுகிறார்கள். EMAIL முகவரி மாநிலச் சங்க வலைத்தளத்தின் முகப்பு பகுதியிலேயே உள்ளது. நிச்சயம் உங்கள் MAIL கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ,
J . இராமமூர்த்தி , மாநிலச் செயலர் ,
அஞ்சல் மூன்று , தமிழ் மாநிலம் .