Thursday, July 2, 2015

INFORMAL MEETING WITH THE DPS, SOUTHERN REGION ON 30.6.2015

மதுரை மண்டல நெறியாளருடன்  சந்திப்பு !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !கடந்த 30.06.2015 அன்று மதுரை சென்ற நம்முடைய மாநிலச் செயலர் , மதுரை மண்டல நெறியாளர் திருமதி. T. நிர்மலாதேவி அவர்களை மரியாதையை நிமித்தம் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது  தோழர். திண்டுக்கல் சுப்ரமணியன் அவர்களும் உடன் இருந்தார். சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது.  சந்திப்பில்  சில முக்கிய ஊழியர் பிரச்சினைகள் குறித்தும்  விவாதிக்கப்பட்டது.  அதன் விபரம் வருமாறு :-

1. திண்டுக்கல் கோட்ட  சுழல் மாறுதலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக கடிதம் அளித்து தெரிவிக்கப்பட்டது. அதன் முழு விபரங்களை கேட்டறிந்த நெறியாளர் அவர்கள் , இதில் பல பிரச்சினைகளில் தான் உடன் படுவதாகவும் , இதுகுறித்து முது நிலை கண்காணிப்பாளரிடம்  விளக்கம் பெற்று  ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

2. மதுரை மண்டல  தொழிற் சங்க பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசிய போது , ஏற்கனவே CPMG  அவர்கள் தெரிவித்தபடி , DIES NON  மீது  DPS  அவர்களிடம் மேல்முறையீடு செய்துள்ளவர்களில் பலருக்கு  அந்த தண்டனை ரத்து செய்து உத்திரவிடப் பட்டுள்ளதாகவும்  குறிப்பாக தோழர்கள். பாலாஜி, பாலமுருகன், நாராயணன், மணி உள்ளிட்டவர்களுக்கு DIES NON ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மேல்முறையீடு மனுக்கள் மீது ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுரை கோட்டச் செயலர் தோழர். சுந்தரமூர்த்தியின் மேல்முறையீடு உரிய  அதிகாரிக்கு  செய்யவில்லை என்பதால் அவருக்கு  அதன் மீது  பதில் அனுப்பப் பட்டுள்ளதாகவும் , அப்படி அவர்  மேல் முறையீட்டு அதிகாரிக்கு மனுச் செய்தால்  அதன்மீதும் ஆவன நடவடிக்கை எடுத்து  ரத்து செய்யப்படும் என்று கூறினார். எனவே இதுவரை மேல்முறையீடு செய்து பதில் வராத ஊழியர்கள் , அதன் விபரங்களை  மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

3.மண்டல அலுவலகத்திலிருந்து  DEPUTATION இல் சென்றுள்ள ஊழியர்களை திருப்ப அனுப்பும் பிரச்சினையில் ,  CHIEF  PMG உத்திரவுப்படி ஏற்கனவே  8+2+1+1 = 12 ஊழியர்கள் திருப்ப அனுப்பப் பட்டுள்ளதாகவும்  3.7.2015 அன்று  மேலும் 12 ஊழியர்களை  திருப்ப மதுரை கோட்டத்திற்கு அனுப்பிட உத்திரவிடப் பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

மேலும் ஊழியர் பிரச்சினைகளில்  தம்மிடம் கொண்டு வரும் பிரச்சினைகளில் சட்டபூர்வமான உரிய நடவடிக்கை  தாம் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அவரிடம் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அணுகுமுறை மாற்றத்திற்கு நாம் நன்றி தெரிவித்து ,  இலாக்காவின் முன்னேற்றத்திலும் ஊழியர் பிரச்சினையை தீர்ப்பதிலும் நம்முடைய ஒத்துழைப்பை நாம்  நிச்சயம் அளிப்போம் என்றும்   தொழில் அமைதி காக்க  நம் மாநிலச் சங்கம் முன் நிற்கும்  என்றும் உறுதி அளித்தோம்.   PMG SR   அவர்கள் CAMP  சென்றிருந்த காரணத்தினால் அவரை பார்க்க இயலவில்லை .