Friday, July 31, 2015

FOUR MONTHLY MEETING HELD ON 21.07.2015- DISCUSSIONS THEREOF

நான்கு மாதப் பேட்டியின்  விபரங்கள் 


கடந்த  21.07.2015 அன்று காலை 10.00 மணி துவங்கி மதியம் 01.15 வரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி CHIEF PMG மற்றும் இதர PMG க்களுடன் நடைபெற்றது . நமது அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் சார்பாக மாநிலச் செயலர் தோழர், J . இராமமூர்த்தி, மற்றும் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பிரச்சினைகளை விவாதித்தார்கள் . பேட்டி  சுமுகமாக நடைபெற்றது. பேட்டியின்போது விவாதிக்கப் பட்ட விபரங்கள் :-


1. மாநில மற்றும் மண்டல அலுவலகங்களில் நீண்டகாலமாக DEPUTATION இல் உள்ள ஊழியர்களை  அவர்களின் சொந்தக் கோட்டங்களுக்கு உடன் திருப்பி அனுப்புதல் . 


இதுவரை மாநிலம் முழுதில் இருந்தும்  மொத்தமாக  திருப்பி அனுப்பப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 73. (இது நமது அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் இடைவிடாத தொடர் முயற்சிக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றியாகும்.)

குறைந்த பட்சம் 20% சதம் ஊழியர்கள் தற்போதைய பணிகளுக்கு தாற்காலிகமாக வைத்துக் கொள்ளப்படுவர். அவர்களும் படிப்படியாக திருப்பி அனுப்பப்படுவர். தாம்பரம் , தருமபுரி  உள்ளிட்ட சில கோட்டங்களில்  நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்களும் கோட்ட அலுவலகத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்..

2. தென் மண்டலத்தில் தொழிற்சங்க காரணங்களுக்காக பழி வாங்கப் பட்ட ஊழியர்களின் தண்டனைகளை முற்றிலுமாக ரத்து செய்தல் . திண்டுக்கல் கோட்டத்தில் அகற்றப் பட்ட  தொழிற்சங்க அறிக்கை பலகையை மீண்டும் அலுவலகத்திற்குள்ளேயே  பொருத்துதல்.

தென் மண்டலத்தில் கடந்த 10.01.2014 அன்று  மண்டல அலுவலகத்தின் முன் நடைபெற்ற  தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் ஏற்கனவே APPEAL செய்தவர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. (இது நமது அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் இடைவிடாத தொடர் முயற்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் )

மேலும் நிலுவையில் எவருக்கும் APPEAL  இருப்பின், அது குறித்து தெரிவித்தால் , மேல் நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் கோட்ட அறிக்கைப் பலகை பிரச்சினை குறித்து உடன் மண்டல அதிகாரியுடன் தொடர்பு கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.( தென் மண்டல அதிகாரி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை ).

3. PARK  TOWN , TAMBARAM , ST  MOUNT  தலைமை அஞ்சலகங்களில் DY . POSTMASTER க்கு  இணைக்கப் பட்ட TREASURY , மற்றும்  SUB ACCOUNTS  பொறுப்புக்களை VOLUME  VI  PART I  CHAPTER  9 அடிப்படையில்  நீக்குதல். 

இது குறித்து DTE  இல் இருந்து PROJECT  ARROW  NORM  அளிக்கப் பட்டதன் அடிப்படையில் இவ்வாறு உத்திரவு இடப் பட்டுள்ளது என்றும்,  இருப்பினும் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான உத்திரவு என்று சுட்டிக் காட்டப் பட்டதால் இது குறித்து DTE  க்கு மேல் நடவடிக்கைக்காக எழுதப்படும் என்று பதில் அளிக்கப் பட்டது.

4. மேலும் தேங்கிக் கிடக்கும் LSG  பதவி உயர்வு குறித்து  உரிய நடவடிக்கை  எடுத்து வருவதாகவும் இது குறித்த ACR /APAR உடன் பெறப்பட்டு பதவி உயர்வு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டது. அதன்படியே கடந்த 22.7.2015 அன்று அனைத்து கோட்டங்களுக்கும் 1198 ஊழியர்களுக்கான ZONE OF CONSIDERATION  LIST  அனுப்பப் பட்டு அவர்களின் ACR /APAR கேட்கப் பட்டுள்ளது.  400 க்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  (இதுவும் நமது அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் இடைவிடாத தொடர் முயற்சிக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றியாகும்) 


இந்த பதவி உயர்வு  அந்தந்த ஊழியர்களுக்கு  உரிய தேதியில் இருந்து NOTIONAL  ஆக அளித்திட வேண்டும் என்று  நாம் கேட்டுள்ளோம். இது குறித்து எதிர்வரும் 06.08.2015  அன்று நடைபெற உள்ள RJCM  கூட்டத்திலும் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. RJCM  SUBJECTS  தனியே  பிரசுரிக்கப்படும்.

5. LGO  TO  P.A.  தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் உள்ள காலதாமதம் பல ஊழியர்களின்  சேவைக் காலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் SHORTAGE  நேரத்திலும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினோம்.

இது குறித்து CHIEF  PMG அவர்கள் நேரடிக் கவனம் செலுத்தி வருவதாகவும்  MEMBER (P ) அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாகவும் நீதிமன்ற பிரச்சினையில் சரியான வழி காட்டுதலை DTE  இடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும்  விரைவில் இந்தப் பிரச்சினை முடிக்கப்படும் என்று  உறுதி அளிக்கப்பட்டது.

6. இது  தவிர CASUAL  LABOURER   களுக்கு 1.1.2006 முதல் வழங்க வேண்டிய உயர் ஊதியம் , நிலுவைத் தொகை , D.A., WEEKLY  OFF மற்றும்  CHENNAI  CITY  NORTH  DIVISION  இல் உள்ள GDS  காலியிடங்களை  நிலுவையில் உள்ள DOVETAILED பட்டியலில் உள்ள CASUAL  LABOURER களைக் கொண்டு நிரப்புவது உள்ளிட்ட  பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டது. 

இது குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக CHIEF  PMG அவர்கள் உறுதி அளித்தார். இருப்பினும்  இந்தப் பிரச்சினைகள் குறித்து மீண்டும் எதிர் வரும் 06.08.2015  அன்று நடைபெற உள்ள RJCM  கூட்டத்தில் விவாதித்திட  SUBJECTS  நாம் அளித்துள்ளோம் . நிச்சயம்  நல்ல  தீர்வினை விரைவில் பெறுவோம்.