மாநில கூட்டு ஆலோசனைக் குழு
(RJCM) கூட்ட முடிவுகள்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
நேற்றைய தேதியில் (04.03.2016) மாநில கூட்டு ஆலோசனைக் குழு(RJCM) கூட்டம் CHIEF PMG ,TNஅவர்கள் தலைமையில் சென்னையில் நடை பெற்றது. மதியம் சுமார் 2.30 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு சுமார் 09.00 மணிவரை நடைபெற்றது. இதில் ஊழியர் தரப்பில் அளிக்கப்பட்ட 95 பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் நடைபெற்று அதன் அடிப்படையில் பெரும்பாலான பிரச்சினைகளில் முடிவுகள் எட்டப்பட்டன.
சிலவற்றில் முடிவுகள் பரிசீலனையில் உள்ளன. தீர்வு ஏற்பட்ட முக்கியமான சில பிரச்சினைகள் குறித்து முடிவுகளை கீழே உங்களின் பார்வைக்கு அளித்துள்ளோம். மீதமுள்ள பிரச்சினைகளுக்கு MINUTES நகல் பெற்றவுடன் தெரிவிக்கப்படும்.
=======================================================================
1. FLOOD ADVANCE வழங்கிட உத்திரவிட்டும் , கோட்ட அதிகாரிகள் சிலர் நிதித் தேவை குறித்து அறிக்கை அனுப்பாத காரணத்தால் இன்னும் வழங்கப்படாத கோட்டங்களில் ( திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ) இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடன் வழங்கிட PMG SR அவர்களுக்கு CPMG அவர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
2.GDS ஊழியர்களது WELFARE ASSISTANCE குறித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன . இவர்களுக்கு WELFARE ASSISTANCE ரூ. 5000/- வழங்கிட 31.3.2016 க்குள் அல்லது கண்டிப்பாக 10.4.216 க்குள் வழங்கிட உத்திரவிடப்படும்.
3. அஞ்சலகங்களின் BUSINESS HOURS மாற்றியமைக்கப்படுவது குறித்து இலாக்காவால் வழங்கப்பட்ட 07.01.2016 உத்திரவு மாநிலமெங்கும் ஒரே சீராக நடைமுறைப்படுத்திட மண்டல அதிகாரிகளுக்கு உத்திரவிடப் படும்.
4. DG அவர்களால் வழங்கப் பட்ட 5.2.2016 உத்திரவின் அடிப்படையில் NSP I இல் BANDWIDTH உடனடியாக அடுத்த நிலைக்கு உயர்த்திட SIFY நிர்வாகத்திற்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதாவது D&E நிலைகளில் ( 'C' CLASS AND 'B' CLASS) உள்ள அலுவலகங்களுக்கு 256 kbps இல் இருந்து 512 kbps ஆக உடன் உயர்த்தப்படும். இதர அலுவலகங்களில் தேவை எனில் 512 kbps இலிருந்து 1 mbps நிலைக்கு உயர்த்தப்படும்.
5. இது பரீட்சார்த்த ரீதியில் 3 மாதங்களுக்கு அமலாகும். இதன் உபயோகிப்பு அளவு ஒவ்வொரு கோட்ட அலுவலகங்களிலும் அந்தந்த துணை அலுவலகங்களுக்கான உபயோகிப்புத் தேவை (UTILITY LEVEL)
E-HEALTH GRAPH மூலம் கண்காணிக்கப்படும் . SLOWNESS என்பது BANDWIDTH குறைபாட்டினால்தான் என்று கணிக்கப்பட்டால் உயர்த்தப்பட்ட BANDWIDTH நிலை நிறுத்தப்படும். இல்லையேல் அதன் அளவு மீண்டும் குறைக்கப்படும். SLOWNESS இன் காரணம் FINACLE அல்லது MAIN SERVER குறைபாடு எனில் இது குறித்து ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுத்திட DG அவர்களுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும்.
6. LGO TO P.A. 2015 க்கான தேர்வு CENTRALISED AGENCY மூலம் நடத்திட அனைத்து ஆவணங்களும் DIRECTORATE க்கு அனுப்பப்பட்டுவிட்டன. இலாக்கா REVISED CALENDER வெளியிட்டு புதிதாக நியமிக்கப்படும் AGENCY மூலம் CENTRALISED ஆக தேர்வு அறிவிக்கும்.
7. இலாக்காவிடம் நாம் கடந்த டிசம்பர் 1, 2 2015 வேலை நிறுத்தத்தை ஒட்டி பெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படியிலும் RJCM 6.8.2015 கூட்ட முடிவின் அடிப்படையிலும் REVISED ASSESSMENT OF P .A . VACANCIES எதிர்வரும் 31.3.2016க்குள் அளித்திட அனைத்து கோட்டங்களுக்கும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8. இதனடிப்படையில் ஏற்கனவே விடுபட்ட காலியிடங்கள், நடப்பு கால காலியிடங்கள், LSG பதவி உயர்வினால் ஏற்பட்ட காலியிடங்கள் சேர்க்கப் பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்தந்த கோட்ட/ கிளைச் செயலர்கள் உடனடியாக செயல்பட்டு அந்தந்த கோட்ட நிர்வாகத்துடன் தெளிவாக எடுத்துப் பேசி 2005 முதல் 2008 வரை விடுபட்ட RESIDUAL காலியிடங்கள் இருப்பின் அவற்றையும் சேர்க்கச் சொல்லி முறையாக காலியிடங்களின் அறிவிப்பை பெற வேண்டுகிறோம். ஏனெனில் இததான் கடைசி வாய்ப்பு . இதனை சரிவர கண்காணிக்க வில்லை எனில் நிச்சயம் மீண்டும் ஒரு சரிபார்ப்பு உத்திரவை இலாக்காவிடம் இருந்து பெறமுடியாது என்பதை நினைவில் கொள்ளவும். அவரவர் நிலைகளில் அவரவர் கடமையை செய்திட வேண்டுகிறோம். இப்போது சரிசெய்யாமல் மீண்டும் SHORTAGE என்று கூறுவது சரியாக இருக்க முடியாது. சரியாக தகவல் பெற முடியாத கோட்டங்களில் 26.1.2015 கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டத்தில் மாநிலச் சங்கம் அளித்த படிவத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை பெற்று சரிபார்க்க வேண்டுகிறோம். இது மிக முக்கியம் . இருப்பினும் RJCM இல் காலியிடங்கள் குறித்த வெள்ளை அறிக்கை நாம் கோரியுள்ளோம் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
9. மேற்கு மண்டலத்தின் சில கோட்டங்களில் ஞாயிறு அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த CHANGE MANAGEMENT பயிற்சி வகுப்புகள் ரத்து செய்திட CPMG ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இதையும் மீறி எந்தக் கோட்டத்தில் நடைபெற கட்டாயப் படுத்தினாலும் உடன் மாநிலச் சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
10. தென் மண்டல தொழிற்சங்கப் பழிவாங்கும் நடவடிக்கை ரத்து செய்தலில் இதுவரை விடுபட்ட தோழர். S .K . JACOB RAJ பிரச்சினை CPMG அவர்களுக்கு சீராய்வு மனு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. பிரச்சினை தீர்க்கப்படும் என்று CPMG அவர்கள் உறுதியளித்தார்.
11. CASH CONVEYANCE பிரச்சினையில் PRIVATE SECURITY AGENCY மூலம் பாதுகாவலர்கள் நியமித்துக் கொள்ள உத்திரவு வழங்கப்பட்டுள்ளதாக
CHIEF PMG அறிவித்தார்.
12. கோட்ட நிர்வாக கோளாறு காரணமாக 2012 முதல் தேங்கிக் கிடக்கும் திருநெல்வேலி மற்றும் சிவகங்கை கோட்ட TA BILL பாஸ் செய்திட உடன் உரிய அறிக்கை அனுப்புமாறு PMG SR அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
13. மதுரை PSD பிரச்சினையில் கடந்த RJCM கூட்டமுடிவின்படி ஏற்கனவே CPMG அவர்கள் அளித்த உத்திரவு செயலாக்கப்படும்.
14. சென்னை பெருநகர எல்லைக்குள் இருக்கும் ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் தினசரி பராமரிப்பு வேலைகளுக்கு தனியார் நிறுவனங் களிடம் இருந்து ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு எதிர்வரும் APRIL 1 முதல் இது அமலாக்கப் படும்.
15. நீண்டகாலங்களாக கோட்ட அலுவலக "ஊழல்" மூலம் பல கோட்ட அலுவலகங்களில் TENURE வரம்பில்லாமல் இருத்தி வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் இந்த சுழல் மாற்றலில் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கான பட்டியல் உரிய RTI மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் மூலம் CPMG அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.
16. மாநில கூட்டு ஆலோசனைக் குழு செயல்பட , ஊழியர் தரப்புக்கு CPMG அலுவலக வளாகத்தில் இரண்டாவது மாடியில் உடனடியாக ஒரு அறை ஒதுக்கித் தரப்படும்.
17. விதி 38 இன் கீழான 5 ஆண்டுகள் முடிவுற்ற அனைத்து ஊழியர்களின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு , விண்ணப்பித்த கோட்டங்களின் காலியிடங்கள் அடிப்படையில் உடன் மாறுதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18. STEPPING UP OF PAY குறித்த அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப் பட்டு CIFA அறிவுரைப்படி விரைவில் தீர்க்கப்பட உள்ளது.
19. BPC க்களில் TURN OVER அடிப்படியில் SUPERVISE செய்ய பணிக்கப்பட்ட IP /ASP க்கள் தினசரி தங்கள் பணிகளை செய்வது கண்காணிக்கப்படும் . தவறு இருப்பின் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
20. CASUAL LABOUR பிரச்சினையில் 1.9.93 க்கு முன்னர் பணியில் இருந்த ஊழியர்களின் கோரிக்கைகள் உடன் பரிசீலிக்க கோட்ட நிர்வாகங்களுக்கு உத்திரவிடப்படும். BPC HANDLING CHARGE குறைக்கப்படக் கூடாது என்றும் , தற்போது குறைக்கப்பட்ட அளவீடு மறு ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவீட்டின் படி உயர்த்தி வழங்கப்படும் என்று CPMG உத்திரவாதம் அளித்தார்.
21. CASUAL LABOUR இதர பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை. எனவே உரிய ஆவணங்களுடன் மீண்டும் இது குறித்து பேசப்படும்.
22. சென்னை வட கோட்டத்தின் DOVETAILED LIST இன் படி நிலுவையில் இருந்த அனைத்து OUTSIDER களிடமிருந்தும் விருப்ப அடிப்படையில் மனு பெறப்பட்டு, தாம்பரம் மற்றும் இதர கோட்டங்களின் GDS காலியிடங் களில் பணி நியமனம் வழங்கிட உத்திரவிடப் பட்டது.
23. திருநெல்வேலி போஸ்டல் DISPENSARY க்கு புதிதாக ஒரு DOCTOR நியமன உத்திரவு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னமும் பணியில் சேரவில்லை.
24. PTC MADURAI க்கு TRAINING செல்லும் தோழர்/ தோழியர்களுக்கு SR 164 அடிப்படையில் 1/4 TH D.A . வழங்கிட பரிசீலிக்கப்படும்.
25. RJCM ஊழியர் தரப்பு கோரிக்கையின் அடிப்படையில் மாநில நிர்வாக அலுவலகத்தில் தற்போது SOLAR POWER PANEL பரீட்சார்த்த அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. சரியான செயல்பாடு இருப்பின் இது தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் விரிவுபடுத்தப் படும்.
26. 'GDS MD' COMBINED DUTY பார்க்கும் GDS BPM களுக்கு 5 மணி நேரத்திற்கு மேல் பணி இருப்பின் REDEPLOYMENT அடிப்படையில் அல்லது SKELETON POST DIVERT செய்யப்பட்டு MD/MC பணி இணைக்கப் பட்டு, பணி வழங்கிட உரிய உத்திரவு அளிக்கப்படும்.
தோழமையுடன்
J . ராமமூர்த்தி,
செயலர் , ஊழியர் தரப்பு, RJCM
மற்றும் மாநிலச் செயலர் ,
அஞ்சல் மூன்று , தமிழ் மாநிலம்.