Saturday, March 19, 2016

TN NFPE COC FIRST STAGE PROGRAMME OF ACTION - DEMONSTRATIONS AT ALL H .O.s ON 17.3.2016 ON SPECIFIC CHARTER OF DEMANDS A GRAND SUCCESS !

FIRST PHASE T.U. ACTION IN TN CIRCLE
A GRAND SUCCESS !

AS PER THE DECISION TAKEN BY TN NFPE COC, AS A FIRST STEP,TN NFPE COC HAS ANNOUNCED STATEWIDE  DEMONSTRATION  AT ALL  H.O.s PRESSING FOR SETTLEMENT OF THE 12 POINT CHARTER OF DEMANDS VIZ.

* STOP TORTURING THE OFFICIALS IN THE NAME OF  TARGET
* INCREASSE BANDWIDTH IN ALL 'C' AND 'B' CLASS OFFICES TO THE 
  NEXT LEVEL
* TAKE ACTION AGAINST 'INFOSYS' FOR THE SLOWNESS IN 'FINACLE'  
  AND 'MC CAMISH'
* IMPLEMENT'BUSINESS HOURS' IN ALL POs AS PER THE ORDERS OF 
  THE DTE.
* STOP REDEPLOYMENT OF POSTMAN POSTS UNMINDFULLY
* STOP COMBINATION OF BEATS; ALLOW  SUBSTITUTES IN VACANT 
  POSTS/LEAVES
* ASSESS VACANCIES AS PER DTE. ORDERS AND FILL UP ALL THE VACANT
  POSTS
* TAKE IMMEDIATE ACTION ON THE MEMORANDUM OF RMS OFFICIALS, 
  CENTRAL REGN
* GRANT FIN .ASSISTANCE TO THE GDS WHO APPLIED FOR, ON THE 
  DEC.15 FLOOD ETC.

THIS PROGRAMME  WAS CARRIED OUT SUCCESSFULLY, ALMOST IN ALL THE DIVISIONS/BRANCHES THROUGHOUT TAMILNADU CIRCLE, WHICH IS AN INDICTIVE OF THE POPULAR SUPPORT ON THE DEMANDS AMONG THE COMMON CADRES, THAT SHOULD BE REALISED BY THE ADMINISTRATION.

WE REQUEST THE CIRCLE ADMINISTRATION ATLEAST TO ENTER AT THIS STAGE AND TO SETTLE THE ISSUES, TO AVOID FURTHER COURSE OF ANY ESCALATION OF TRADE UNION ACTION.

இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து கோட்ட/ கிளைகளின் செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும், அதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முன்னணித் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்  நம் COC  சார்பாகவும் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பாகவும்  எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

நிதி ஆண்டு இறுதியில், FINACLE  மற்றும் MC  CAMISH  இயங்காத சூழலில், SIFY NETWORK செயலிழந்த நிலையில்,அஞ்சல் சேமிப்பு வங்கிப் பிரிவில், வங்கிகளை விட வட்டி விகிதங்கள் சகட்டுமேனிக்கு குறைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் கொதித்தெழுந்து ஊழியர் களை வசைபாடும் வேளையில்ன்னமும் கண்மூடித்தனமாக எப்படித் தான் அதிகார வர்க்கம் ஊழியர் மீது குதிரை சவாரி செய்கிறதோ தெரிய வில்லை.  இது முற்றிலும் புரியாத புதிராகத்தான்  உள்ளது.

ஆயிரக்கணக்கான கோடி பணம் பெற்ற INFOSYS நிறுவனம் தனது கடமையில்  தவறுவதைக் கண்டிக்கக்கூட நமது நிர்வாகத்திற்கு நெஞ்சுரம் இல்லையா ? அப்பாவி ஊழியர் மேல் குதிரை ஏறியே பழக்கப்பட்ட நிர்வாகம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது ?. 

நம் மாநிலத் தலைமை அதிகாரி நல்லவர்தான். மனிதாபிமானம் மிக்கவர்தான். மண்டல தலைமை அதிகாரிகள் கூட நல்லவர்களே. அவர்கள்கூட இந்தப் பிரச்சினையில் வாய் மூடி கை கட்டி மௌனம் சாதிப்பது ஏன் ? 

சிந்திக்குமா நிர்வாகம் ? சீர்படுத்துமா அஞ்சல் சேவையை ? மக்கள் சேவை காக்கப்படுமா? தத்தளிக்கும் ஊழியர்கள் காப்பாற்றப் படுவார்களா? இல்லையேல், வழக்கம் போல, எங்களுக்கு பிரச்சினை களுக்கு விடை காணத் தெரியாது. கேள்வி மட்டுமே கேட்கத் தெரியும் என்று கூறி, ஒவ்வொரு அதிகாரியும் அவரவர் மேலதிகாரியை திருப்திப்படுத்தினால் போதும் என்று தினசரி கூட்டங்களிலும், கற்பனையான V.C.க்களிலுமே, "வெள்ளைக் காக்கை பறக்கிறது... ஆமாமாம் பறக்கிறது " என்று கூறி வாளாக  இருந்து விடுவார்களா ? 

கேட்டுப் பார்த்தோம் !  பேசிப் பார்த்தோம் ! கால அளவிலான அங்கீகரிக்கப்பட்ட கூட்டங்களில் வாதாடிப் பார்த்தோம்! கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை கடிதங்கள் எழுதிப் பார்த்தோம் ! தலமட்ட போராட்டங்களை ஈராண்டுகளாக நடத்தியும் வருகிறோம் ! நிறைவாக தீர்வேதும் கிடைக்கவில்லை! இது மாற்றங்களின் நேரம்! TRANSITION PERIOD ! கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று 2012 முதல் நான்கு ஆண்டுகளாக கூறுவதையே வாடிக்கையாக கொண்டுவருகிறது நிர்வாகம் !

புரியட்டுமே என்று பொது வலைத்தளத்தில்  கருத்துக்களை பதிய வைக்கிறோம் ! புலம்புவது நமது வேலையல்ல ! புரிதல் ஒன்றே நமது தேவை ! தீர்வு ஒன்றே நமது குறிக்கோள் ! 

நிர்வாகம் பதில் சொல்லட்டும் ! இல்லை பதிலைநோக்கி நம் போராட்டம் பயணிக்கட்டும் ! அடுத்த கட்ட போராட்டம் நோக்கி நாம் பயணிப்போம்! மாறுவது ஒன்றே விதி! மாற்றங்களைக் கொண்டு வருவோம் ! பொது மக்களுக்கும் சேர்த்தே விடை காணுவோம் !

பல கிளைகளின் ஆர்ப்பாட்ட நிகழ்வின் புகைப்படங்கள் கீழே !

CHENNAI CITY SOUTH DIVISION


CHENNAI CITY NORTH DIVISION 


CHENNAI CITY CENTRAL DIVISION

VRIDDHACHALAM DIVISION

VELLORE DIVISION

DINDIGUL DIVISION

SRIRANGAM DIVISION 

COIMBATORE DIVISION

TIRUNELVELI HPO - TNV DIVISION 

PALAYANKOTTAI HO-TNV DN.

KUMBAKONAM DIVISION 

TUTICORIN DIVISION 

THANJAVUR DIVISION 

MAYILADUTURAI DIVISION 

KANCHIPURAM DIVISION 

ARNI HO- TIRUVANNAMALAI DN. 

OOTY DIVISION 

METTUPALAYAM BRANCH -TIRUPUR DIVISION

TIRUPPATTUR DIVISION


TIRUTHURAIPUNDI BRANCH - PATTUKKOTTAI DIVISION

UDUMALPET BRANCH - POLLACHI DIVISION 

TIRUNELVELI PSD BR.