திருப்பத்தூர் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்
திரு.அய்யாக்கண்ணு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட கிளை அஞ்சலக அதிகாரியின் மனைவியிடம் பணிக்கு திரும்ப உத்திரவிட
ரூ. 35000/- லஞ்சம் பெற்றதாகவும் , மேலும் அவரிடம் செல் போனில் ஆபாசமாக பேசி செக்ஸ் தொந்தரவு செய்ததாகவும் திருமதி . சரோஜா என்பவர் ஆடியோ CD இல் பதிவு செய்யப் பட்ட ஆதாரத்துடன் நேற்று திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அதன்மீது காவல் நிலையத்தில் FIR போடப்பட்டு வழக்கு தொடரப் பட்டுள்ளதாகவும் தினகரன் வேலூர் பதிப்பின் 25.09.2013 பத்திரிக்கை செய்தியை கீழே காண்க.
இவர் மீது ஏற்கனவே நமது மாநிலச் சங்கத்தின் மூலம் பலமுறை மேற்கு மண்டல PMG அவர்களிடம் புகார் அளித்தும் CPMG அவர்களிடம் புகார் அளித்தும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படாமல் ஊழியர் சங்கங்களை சமாதானப் படுத்தியது மாநில மண்டல நிர்வாகங்கள் ! அவர் நல்ல அதிகாரி என்று வேறு பட்டயம் வழங்கினார்கள் !
நமது அகில இந்திய சங்கமும் அவர் மீது புகார் அளித்துள்ளது . நமது சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களும் நேரிடையாக CPMG அவர்களுக்கு புகார் அளித்துள்ளதும்
குறிப்பிடத் தக்கது.
ஆனால் அதிகாரிகளுக்கு அதிகாரி என்ற வகையில் அவரை விட்டுக் கொடுக்காமல் பல உயர் அதிகாரிகள் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து கோப்புகளை இழுத்து மூடினர்.
"அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்று கொல்லும் " இது
நமது நாட்டின் முது மொழி. தவறுக்கு மேல் தவறு செய்த
அந்த அதிகாரி இன்று காவல்துறையின் பிடியில் !
உயர் நீதி மன்றத்தில் பிடி வாரண்டுக்கு , பணம் கட்டிவிட்டேன் என்று கூறி ANTICIBATORY BAIL போட்டு இன்று வெளியில் மண்டல அலுவலகத்தில் உலாவரும் ஒரு ஊழல் அதிகாரி இவருக்கு பாதுகாப்பு அளிக்கிறாராம் . இது குறித்தும் நமது PMG, WR அவர்களும் CPMG அவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
"என்ன தேசமோ ! இது என்ன தேசமோ !
இங்கு தர்மம் தூங்கிப் போகுமோ ? நீதி வெல்லுமோ ?
வெகு நாளும் ஆகுமோ ?"
மாநில மண்டல அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டுகிறோம்!