Saturday, September 21, 2013

HIGHER RATE OF HRA AND TRANSPORT ALLOWANCE FROM 01.03.2011 BASED ON CENSUS 2011 REPORT

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

நேற்றைய தேதியில் உயர் வீட்டு வாடகைப் படி பெறுவதற்கான நம் மாநிலச் சங்கத்தின் முயற்சி குறித்தும் அதன் மீது நம் அகில இந்திய சங்கத்தின் செயல் பாடு குறித்தும் , இதன் காரணமாக DIRECTORATE  இல் இருந்து அனைத்து CPMG மற்றும் GM  FINANCE  க்கு அனுப்பப் பட்டுள்ள கடித்தத்தின் நகல் குறித்தும் தெளிவாக  தெரிவித்திருந்தோம். 

எனவே  இது குறித்து கோட்ட/ கிளைச் செயலர்கள் உடனடியாக விரைந்து செயல்பட கேட்டுக் கொண்டிருந்தோம். 

தற்போது  CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் எந்த எந்த பகுதிகள்  URBAN AGGLOMERATION  பகுதியாக உயர் வீட்டு வாடகைப்படி அறிவிக்கப் பட்ட பெரு  நகரங்களை சார்ந்து வருகிறது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும்,  இதன் மேல் விபரங்கள் புரியவில்லை என்றும்  பல செயலர்கள் தெரிவித்தார்கள் .அது குறித்து சில விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள மாநிலச் சங்கம் விரும்புகிறது.

நமது தமிழ் நாட்டை பொறுத்தவரை உயர் வீட்டு வாடகைப் படி பெறுவதற்கு தகுதியான  பகுதிகள் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டவை பட்டியல் கீழே பார்க்கவும் :-

1. X  CATEGORY CITY - CHENNAI - POPULATION - 50 LAKHS  AND  ABOVE - 30% HRA 

2. Y  CATEGORY CITY -
    COIMBATORE, MADURAI, TRICHY, SALEM, TIRUPUR, PONDICHERY -
    POPULATION - ABOVE 5 LAKHS AND BELOW 50 LAKHS -                              - 20 % HRA

3.  Z CATEGORY -  ALL OTHER  TOWNS -  POPULATION - BELOW 5 LAKHS - 10%   HRA

                                                    A . புதிய  Y  CATEGORY  பகுதி :-

இதில் தற்போது  ERODE  CITY  CENSUS 2011 புள்ளி விபர அடிப்படையில்  5 லட்சத்திற்கு மேல்  மக்கள் தொகை உள்ள பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது .எனவே  ஈரோடு நகரமும் , அது சார்ந்த URBAN  AGGLOMERATION  பகுதியாக CENSUS 2011 இல் அறிவிக்கப் பட்ட 

வீரப்பன்சத்திரம்,  சூரம்பட்டி,  காசிபாளையம், பவானி , சூரியம்பாளையம், 
பிராமண பெரிய அக்ரகாரம், பெரியசேமூர், மேட்டுநசுவம்பாளையம் ஆகிய பகுதிகள்  Y  CATEGORY  இல் 20 % HRA  பெற்றிட தகுதி வாய்ந்த பகுதிகளாகும். 
                                                B . புதிய URBAN AGGLOMERATION 

ஈரோடு தவிர கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் மற்றும் பாண்டிச்சேரி நகரை ஒட்டியுள்ள  உயர் வீட்டு வாடகைக்கு தகுதியான URBAN AGGLOMERATION  ஆக அறிவிக்கப் பட்ட பகுதிகள் பட்டியல் கீழே  அளித்துள்ளோம் . அந்த பகுதிகளும் 20% HRA  பெற தகுதியானவை ஆகும்.


                                                           C . சென்னை பெருநகர் 

சென்னை பெருநகர் ஏற்கனவே X  CATEGORY ஆக 30% HRA   பெற்றிட தகுதி பெற்றதாகும். இதன் விரிவாக்க பகுதியாக URBAN AGGLOMERATION ஆக CENSUS 2011 இல் அறிவிக்கப் பட்ட பகுதிகள் பட்டியல் கீழே அளித்துள் ளோம். அந்த பகுதிகள் தற்போது 10% HRA  பெற்று வருபவை ஆகும். இனி 30% HRA  வுக்கு தகுதியானவை  ஆகும். 

       D. சென்னை மற்றும் சென்னை UA  பகுதிகளுக்கு 
உயர் TRANSPORT ALLOWANCE 

A ) இலாக்கா உத்திரவுப்படி GRADE PAY Rs.4200 க்கு கீழும் PAY BAND 7440 க்கு கீழும் பெறுபவர்களுக்கு , புதிய URBAN AGGLOMERATION  பகுதியில் வந்தவர்களுக்கு  TRANSPORT ALLOWANCE  சென்னை பகுதியில் 600 + DA வாக கிடைக்கும் . இவர்கள் தற்போது 400+ DA பெறுகிறார்கள்.  

B ) இலாக்கா உத்திரவுப்படி  GRADE PAY  Rs .4200, 4600, 4800 பெறுபவர் களுக்கும்,  4200 க்கு கீழ் GRADE PAY பெற்று  PAY  BAND  7440 பெறுபவர் களுக்கு , புதிய URBAN  AGGLOMERATION பகுதியில்  வந்தவர்களுக்கு  TRANSPORT ALLOWANCE  சென்னை பகுதியில் 1600 + DA  வாக கிடைக்கும்.  இவர்கள் தற்போது 800 + DA பெறுகிறார்கள். 

E . முன்தேதியிட்டு அரியர்சுடன்  பட்டுவாடா பெறலாம் 

மேலே கூறிய இனங்களில் உயர் வீட்டு வாடகைப் படி மற்றும்  உயர் TRANSPORT ALLOWANCE  என்பது CENSUS 2011 அறிவிக்கப் பட்ட தேதியில் இருந்து வழங்கிட வேண்டும். அதாவது 1.3.2011 இல் இருந்து அரியர்சுடன்  வழங்கப் பட வேண்டும். 

தோழர்களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே ! தற்போது இந்த பிரச்சினையின் முக்கியத்துவம் உங்களுக்கு முழுவதும் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம். நிச்சயம் நீங்கள் உங்கள் கோட்ட அதிகாரியிடம் பிரச்சினையை எடுத்துச் சென்று  உரிய PROPOSAL  அனுப்பிடவும். தகவலை மாநிலச் சங்கத்திற்கு உடன் தெரிவிக்கவும். நடக்க இருக்க உள்ள RJCM இல் இந்த பிரச்சினை குறித்து நாம் விவாதிக்க உள்ளோம். நிச்சயம்  தகுதியான அனைவருக்கும்  ஆயிரக்கணக்கான ரூபாய் அரியர்சுடன்  உயர் வீட்டு வாடகைப் படி மற்றும் உயர் TRANSPORT  ALLOWANCE  பெற்றிட முடியும். 

நன்றியுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.

இணைப்பு:-  CENSUS URBAN AGGLOMERATION  பட்டியல் கிளிக் செய்யவும்  :-

பக்கம் 54 to  பக்கம் 59 -   SL 273  to SL 278