"என்ன தேசமோ ! இது என்ன தேசமோ !
இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ ?
தர்மம் தூங்கிப் போகுமோ ? நீதி வெல்லுமோ ?
வெகு நாளும் ஆகுமோ ?"
*************************************
பார்க்க தினத்தந்தி பத்திரிகை செய்தி !
கணவனை வேலைக்கு திரும்ப சேர்க்க வேண்டுமானால் அந்த ஊழியரின் மனைவியிடம் தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று திரு. அய்யாக்கண்ணு வற்புறுத்தினாராம் .
இந்தப் புகாருக்கு ஆதாரமாக செல் போனில் பதிவு செய்யப்பட கண்காணிப்பாளரின் உரையாடல் நகல் CD இல் பதிவு செய்து அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதைப் பார்க்கவும்.
திரு . அய்யாக்கண்ணு மீது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (FIR) நகலினை கீழே பார்க்கவும். கணவனை மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ள ரூ. 35000/- லஞ்சம் பெற்றதாகவும் அது தவிர அந்த ஊழியரின் மனைவியிடம் "இரவில் தன்னுடன் தனியாக தங்கினால் தான் அவரது கணவருக்கு மீண்டும், வேலை தருவேன்" என்று திரு அய்யாக்கண்ணு கூறியதாகவும் FIR அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
இதனால் அந்த கண்காணிப்பாளர் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்றும் அதனை எதிர்பார்த்து "முன் ஜாமீன்" பெற்றிட அவர் பல நீதி மன்றங்களை அணுகியுள்ளதாகவும் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் இருந்து மாநிலச் சங்கத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.
சாதாரண ஊழியர்கள் தவறு செய்ததாக வெறும் புகார் வந்தாலே 'SUSPEND" செய்யும் நிர்வாகம் , இவ்வளவு நடந்தும் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன் ? என்று ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். மகளிருக்கு எதிரான புகார் வந்தால் உடன் விசாரித்து "டிஸ்மிஸ் " செய்திட பரிந்துரைக்கும் அந்த அமைப்பின் அதிகாரி , இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம் ! ஏன் என்று தெரியவில்லை என்று ஊழியர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் கொந்தளித்துள்ளார்கள்.
எனவே இது குறித்து குற்றம் சாட்டப் பட்ட அந்த அதிகாரி உடன் "SUSPEND" செய்யப் பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னையில் முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலக வாயிலில் மாபெரும் அளவில் மகளிர் அமைப்புகளை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் ஓரிரு நாளில் நடத்தப் போவதாக திருப்பத்தூர் பகுதியில் இருந்து அதன் செயலாளர் நம்மிடம் தெரிவித்துள்ளார்.