கோவில்பட்டி கோட்டத்தின் JCA சார்பாக நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் தலமட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கோரி மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப் பட்டு கடந்த 06.08.2013 அன்று ஆர்ப்பாட்டமும் , 13.08.2013 அன்று தர்ணா போராட்டமும் 03.09.2013 மற்றும் 04.09.2013 ஆகிய தேதிகளில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப் பட்டு , முதல் இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டு , கோரிக்கைகளில் எந்த வித முன்னேற் றத்தை யும் கோட்ட நிர்வாகம் அளிக்காத காரணத்தால் மூன்றாவது கட்ட போராட்டம் கடந்த 03.09.2013 அன்று காலை துவக்கப் பட்டது . இதில் தோழர் ஸ்ரீவெங்கடேஷ் மாநிலத்தலைவர் அஞ்சல் மூன்று , தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் அஞ்சல் மூன்று , தோழர் தன்ராஜ் மாநில செயலாளர் GDS-NFPE, தோழர் தியாகராஜபாண்டியன் தென்மண்டல செயலாளர் அஞ்சல் மூன்று, தோழர் ராமராஜ் , மாநிலத் தலைவர் ,GDS NFPE ஆகியோர் கலந்து கொண்டனர் .
மண்டல அலுவலகத்தின் தலையீட்டின் பேரில் , காலை 11.30 மணிக்கு கோவில்பட்டி முது நிலைக் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தைக்கு நிர்வாகிகளை அழைத்தார். பேச்சு வார்த்தையில் அங்கு சென்றிருந்த மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட , கிளைச் சங்க நிர்வாகிகள் பங்கு கொண்டோம். பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக 27 அம்சக் கோரிக்கைகளை மீது தனித் தனியே எழுத்து பூர்வமான பதிலுடன் கூடிய MINUTES கண்காணிப்பாளர் அவர்களால் பதிவு செய்யப் பட்டு மாநிலச் செயலரிடம் அளிக்கப் பட்டது. கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை தீர்க்கப் படுவதாக எழுத்து மூலம் பதில் பெற்றதாலும், இதர RT இட மாறுதல் கோரிக்கைகளுக்கு மண்டல அலுவலகத்துக்கு பரிந்துரைப்பதாகவும் பதில் அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப் பட்டது.
தொடர்ந்து தல மட்டக் கோரிக்கைகளுக்காக தொய்வில்லாமல் போராடிய கோவில்பட்டி , சங்கரன்கோயில், தென்காசி அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, GDS கோட்ட/கிளைச் சங்க நிர்வாகிகளுக்கும் அனைத்து தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். !
தல மட்டத்தில் கிளர்ந்தெழுந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்று மீண்டும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அங்கு எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சிலவற்றை கீழே பார்க்கவும் .