தென் மண்டல நிர்வாகத்திற்கு மாநிலச்
சங்கத்தின் எச்சரிக்கை !
நெல்லையில் பற்றும் தீ தென்
மண்டலத்தில் பரவும் !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். இன்று ( 11.12.2014) மாலை திருநெல்வேலி கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் சார்பாக திருநெல்வேலி கோட்டக் கண்காணிப்பாளர் திரு.
S . ராமகிருஷ்ணன் அவர்களின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்தும் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்காக நெல்லை கோட்டச் செயலருக்கு வழங்கப் பட்ட தண்டனையை எதிர்த்தும் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் போராட்டம் வெற்றி பெற மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தென் மண்டலத்தில் பல்வேறு கோட்டங்களில் நிர்வாக அத்துமீறலை நாம் ஏற்கனவே மண்டல அதிகாரியிடம் பட்டியலிட்டு அளித்திருக்கிறோம். நம்முடைய CHIEF PMG அவர்களிடமும் ஏற்கனவே பலமுறை புகார் மனு அளித்து நம்முடைய அஞ்சல் -RMS இணைப்புக் குழு மூலம் பேசியுள்ளோம். அவரும் பலமுறை தென் மண்டல பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைப்பதாக நம்மிடம் உறுதி அளித்துள்ளார். எழுத்து பூர்வமாகவும் பதில் அளித்துள்ளார். ஆயினும் பிரச்சினைகள் தீர்வதற்கு பதில் , மேலும் மேலும் பிரச்சினைகள் நிர்வாகத்தால் உருவாக்கப்படுவது கண்டிக்கத் தக்கது.
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான CHIEF PMG அவர்களுடனான பேட்டியில் இது குறித்து நாம் SUBJECT அளித்துள்ளோம். அதன் நகலும் நம்முடைய வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டுள்ளது. CHIEF PMG அவர்கள் இது குறித்து தென் மண்டல நிர்வாகத்திடம் அறிக்கை பெற்றுள்ள சூழலில் இப்படி அத்து மீறி பழி வாங்கும் நடவடிக்கைகள் தொடருமானால் நம் மாநிலச் சங்கம் மட்டுமல்ல , தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுவும் பார்த்துக் கொண்டு இருக்காது என்பதை , இந்த வலைத்தளம் மூலம் எச்சரிக்கையாக நிர்வாகத்திற்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்வரும் 21.12.2014 சம்மேளன வைரவிழா நிகழ்வுக்குப் பின்னர் தென் மண்டலத்தில் போராட்ட களம் அமைக்கப் படும் என்று நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம். ! தென் மண்டலம் அமைதிக் களமாக இருக்க வேண்டுமா ? போராட்ட களமாக மாற வேண்டுமா என்பதை நிர்வாகமே தீர்மானிக்கட்டும்.!