Wednesday, December 24, 2014

REVISION OF CASH HANDLING ALLOWANCE - LONG PENDING ITEM SETTLED IN JCM DC MEETING HELD ON 16.12.2014

கடந்த 16.12.2014  அன்று டெல்லியில் நடைபெற்ற JCM  இலாக்கா குழு கூட்டத்தில்  நீண்ட காலமாக  தீர்க்கப் படாமல்  நிலுவையில் இருந்த  'REVISION  OF SPM  CASH  HANDLING  ALLOWANCE '  என்ற  அஞ்சல் மூன்றின்  பிரச்சினை நமது பொதுச் செயலர்  தோழர். N . சுப்பிரமணியன் அவர்களின்  தீவிர முயற்சியால் அன்றைய தினமே  SPOT  ORDER  ஆக  கூட்டத்திலேயே பெறப்பட்டுள்ளது .  இது இலாக்காவில் இருந்து அனுப்பப் படும் முறைப்படியான உத்திரவு இல்லையெனினும் , உடன் முறையான உத்திரவு அளிக்கப்படும் என்பதற்கான உத்திரவாதத்தை எழுத்து மூலம்   கூட்டம்  நடக்கும்  நாளிலேயே பெறுவதென்பது  குறிப்பிடத்தகுந்த சிறப்பான  ஒரு செயலாகும்.  இதற்காக  தோழர். N .S . அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின்  பாராட்டுக்கள் !

குறிப்பாக இப்படி ஒரு அலவன்ஸ்  உண்டு என்பது கூட நம்மில் பெரும்பகுதி  தோழர்களுக்கு தெரியாது. நிறைய இடங்களில்  'C ' மற்றும் 'B ' CLASS  SPM  கள்  இதனைப் பெறுவதற்கு  மாதாந்திர CASH  HANDLING  தொகை எவ்வளவு என்று எடுத்து அதில் இருந்து ஒரு நாளைக்கு  AVERAGE  தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து  STATEMENT  ஆக அனுப்பி அதற்கு உரிய   CASH  HANDLING  ALLOWANCE  CLAIM  செய்வது இல்லை  என்பதே உண்மை.  ஏற்கனவே ரூ. 70/- மற்றும் ரூ.140/- இருந்த காலங்களில்கூட இதனை பல தோழர்கள் பெற்றது கிடையாது . 

இது போலத்தான் AGENCY  முறையில் நாம் செய்திடும் BUSINESS  VENTURE  வேலைகளுக்கு,  அதற்காக நம் இலாக்காவிற்கு அளிக்கப்படும் கமிசன் தொகையில் 25% அதில் வேலை செய்பவர்களுக்கு INCENTIVE  ஆகப் பெறமுடியும் என்பதும்  பலருக்கு தெரியாது. 

நாம் பலமுறை எடுத்துக் கூறியும் எவரும் CLAIM  செய்வதும்  இல்லை.  உரிய வேலைப் பளு கணக்கிடு வதற்கான  TIME  FACTOR  வழங்கப் படாத எந்த ஒரு  B.D. வேலைகளுக்கும் இந்த உத்திரவு பொருந்தும்.  இதற்கான  உத்திரவை ஏற்கனவே  DEPT  இல்  நம் சங்கத்தின் மூலம் போராடிப் பெற்றிருந்தும்  அது செயல்படுத்தப் படுவதில்லை என்று  நம் மாநிலச் செயலர்  RJCM  இல்  பிரச்சினையை எடுத்து அதன் மீது மீண்டும்  உத்திரவு பெற்று அதன் நகலை இதே வலைத்தளத்திலும் பிரசுரித்துள்ளார் என்பது உண்மை .

 உதாரணமாக  EB  BILL  பெறுவதில்  இலாக்காவுக்கு  ஒரு BILL  க்கு  ரூ. 10/- கமிசன் ஆக கொடுக்கப் பட்டால் , அதில் வேலை செய்பவர்களுக்கு  ரூ.2.50 INCENTIVE  ஆக CLAIM  செய்திட உரிமை உண்டு . SUPERVISOR  0.50 காசுகளும்  எழுத்தர்  ரூ.2.00 ம் என்ற விகிதத்தில் மொத்தம் எவ்வளவு BILL கள்  பெறப்பட்டதோ அதற்கான தொகை கணக்கீடு செய்து   மாதாந்திர BILL  CLAIM  செய்து  வாங்கிடலாம்.

நம்முடைய கோட்ட/ கிளைச் செயலர்கள்  நாம் பெற்ற இந்த உரிமைகளை அடிமட்ட ஊழியர்களுக்கு கொண்டு சென்று சேர்த்திட முயற்சி மேற் கொண்டிட வேண்டுகிறோம். இந்த செய்திகளை அனைத்து வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொண்டிட வேண்டுகிறோம்.

CASH  HANDLING  ALLOWANCE  SPOT  ORDER  நகலை கீழே பார்க்கவும் :-