Monday, December 29, 2014

TN NFPE COC DIAMOND JUBILEE CELEBRATIONS A GRAND SUCCESS

தமிழக NFPE  இணைப்புக் குழுவின் சார்பில் கடந்த 21.12.2014 அன்று சென்னை சேத்துப்பட்டு WORLD UNIVERSITY SERVICE  CENTRE  இல் NFPE  வைரவிழா நிறைவு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப் பட்டது.  விழாவில் சம்மேளன மாபொதுச்  செயலர் தோழர். R .N . பராசர், அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .சுப்பிரமணியன் , RMS நான்கின் பொதுச் செயலர் தோழர். P .சுரேஷ் , GDS  சங்கத்தின்  பொதுச் செயலர் தோழர். P . பாண்டுரங்க ராவ் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக  பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் , பொருளர் தோழர். S .சுந்தரமூர்த்தி . ITEF  பொதுச் செயலர் தோழர். M .S . வெங்கடேசன்  உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு  சிறப்பித்தார்கள் .  

NFPE  இணைப்புக்  குழு  கன்வீனர்  தோழர்  J .  ராமமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றிட ,  இணைப்புக் குழுவின்  தலைவர் தோழர். பரந்தாமன் அவர்கள்   தலைமை தாங்கிட விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மூத்த தலைவர்கள்  தோழர்.  A .V .V .,  தோழர். A .G .P .,  தோழர். K .R ., தோழர். K.V.S. , தோழர். கண்ணையன், தோழர். C .A. தோழர். சிவகுருநாதன்   உள்ளிட்ட   மொத்தம் 37 மூத்த தலைவர்களும்  தோழர். பராசர் உள்ளிட்ட  4 சிறப்பு விருந்தினர்களும்  நினைவுக் கோப்பை வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.  மூத்த தலைவர்கள் சம்மேளனத்தில்  தாங்கள் ஆற்றிய  பங்கினை நினைவலைகளாகப் பகிர்ந்துகொண்டது  சிறப்பான நிகழ்வாக இருந்தது.  விழாவில்  தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும்  500 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது  பெருமைப்படும்  வண்ணம்  அமைத்த  நிகழ்வாகும். விழாவில்  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். கண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்ற  இரவு 08.00 மணியளவில்  விழா சிறப்பாக நிறைவுற்றது. விழாவில் எடுக்கப்பட்ட  புகைப்படங்களில் சிலவற்றை கீழே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.