INFOSYS நிறுவனத்தின் சோதனை எலிகளா
தமிழகத்து அஞ்சல் எழுத்தர் ?
கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் CBS அலுவலகங்களில் EOD கொடுக்க முடியாமல் மறுநாளைக்கான BOD செய்ய முடியாமல் , COUNTER இல் வந்த CUSTOMER களிடம் பதில் சொல்ல முடியாமல் , வேறு வழியில்லாமல் வாங்கிய பணத்தையும் VOUCHER களையும் வரவு வைக்க முடியாமல் இரவு பகலாக தூக்கம் தொலைத்து , பொது மக்களிடம் 'அடி உதை' வாங்காத குறையாய் , வசவுகளை மட்டுமே வாங்கி தன் பணியை இன்றுதான் முடித்தான் நம் தோழன் .
இதில் தமிழகத்து தோழனுக்கு சிறப்பான இடம் உண்டு .
ஏன் தெரியுமா ? நாம் தானே சோதனை எலிகள் !
யாருக்கு ? INFOSYS நிறுவனத்திற்கு !.
ஏன் சோதனை எலிகள் ஆனோம் ?
'எத்தனை அடித்தாலும் வாங்குகிற வடிவேலு 'வை காரணம் கேட்க
'அதில ஒருத்தன் என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா ' என்று கூறும் திரைப்பட வசனம் போல, நம்மை நல்லா வேலை பார்க்கிறான் ' னு நம்முடைய உயர் அதிகாரிகள் சொல்லி விட்டார்கள் அல்லவா ?
எப்படி ?
இந்தியாவிலேயே CBS MIGRATION முதன் முதலில் துவங்கியதும் தமிழகத்தில்தான் .. மிக அதிக அலுவலகங்கள் MIGRATE செய்யப் பட்டதும் தமிழகத்தில் தான் ... அதுவும் அதிவேக எண்ணிக்கையில்............
அதாவது 05.01.2015 இலாக்கா புள்ளி விபரப்படி MIGRATE செய்யப்பட அலுவலகங்கள் :-
தமிழகத்தில் H.O. - 94 S.O.s - 289 மொத்தம் - 383 அலுவலகங்கள்
பீகார் H.O. - 1 S.O. - NIL H.O. - சத்தீஸ்கர் - 1 S.O. - NIL
குஜராத் H.O. - 4 S.O. - NIL ஹரியானா - H.O. - 4 S.O. - NIL
ஹிமாச்சல் H.O. - 3 S.O. - NIL ஜார்கண்ட் - H.O. - 8 S.O. - NIL
கேரளா H.O. - 13 S.O. - NIL மத்திய பிரதேஷ் H.O. - 14 S.O. - NIL
இப்படிப் போகிறது பட்டியல் .... உங்களுக்குத் தெரியாது .. ஆனால் நம்முடைய அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் !
இப்படி வேகமாக செய்து முடிக்க நம்முடைய அதிகாரிகள் காட்டும் அதீத ஆர்வம்............... , அது சரியாக இருக்குமானால் நமக்கும் நிச்சயம் சரியாக ஏற்றுக் கொள்ள முடியும். அதில் தவறில்லை . ஆனால் 1100 கோடி 'ஏப்பம்' விட்ட INFOSYS COMPANY யை........ வாங்கிய பணத்திற்கு வேலை செய்ய வைக்க நம்முடைய அதிகாரிகளால் முடியவில்லை அல்லவா ?
MOCK MIGRATION செய்து பார்த்துதானே DATA CENTRE இல் DATA MIGRATE செய்கிறார்கள் ?
அப்படியானால் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் எத்தனை கணக்குகள் உள்ளது என்ற எண்ணிக்கை அவர்களுக்கு தெரியாதா ?
எத்தனை அலுவலகங்கள் ' இடையில் வரும் ஒரு SUNDAY அல்லது HOLIDAY யில் MIGRATE செய்ய முடியும் என்று தெரியாதா ?
அதற்கு ஏற்றார்போல அலுவலக எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ள தெரியவே தெரியாதா ?
03.01.2015 ஒரே நாளில் 103 அலுவலகங்கள் MIGRATE செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
அந்த DATA 06.1.2015 வரை MIGRATE செய்து முடிக்க முடியவில்லையே ஏன் ?
அதுவரை பொதுமக்களிடம் உதை வாங்கியது.... வாங்குவது யார் ?அப்பாவி அஞ்சல் ஊழியன் தானே ?
1100 கோடி வாங்கிய INFOSYS காரன் அல்லவே ?
06.01.2015 BOD 06.01.2015 மாலை 06.45 க்கு துவக்கலாம் என்று வெட்கமில்லாமல் MAIL கொடுப்பதை நம் அதிகாரிகள் எவ்வாறு ஏற்கிறார்கள் ?
நாம் ஒரு TRANSACTION செய்யவில்லை என்றால்கூட RULE 16 கொடுக்கத் துடிக்கும் அதிகாரிகள் , நாடுமுழுதும் உள்ள 1539 MIGRATE செய்யப் பட்ட அலுவலகங்கள் இரண்டு நாட்களாக ஸ்தம்பித்தபோது என்ன செய்தார்கள் ?
பல லட்சம் மக்களின் சேவை பாதிக்கப்பட்டதற்கு என்ன செய்தார்கள் ?
CUSTOMER இழப்புக்கு என்ன செய்யப் போகிறார்கள் ? ஓ ! குட்டி அதிகாரிகள்தான் நம் ஊழியனின் 'பெண்டாட்டி' பேரிலும் 'பிள்ளை' பேரிலும் பல நூறு கணக்குகள் துவக்கிடச் சொல்லுகிறார்களே ? பார்த்துக்கொள்ளலாம் ... என்ற நினைப்போ ?
எத்தனை மனித உழைப்பு நாட்கள் வீணடிக்கப்பட்டன ? இந்த நஷ்டத்தை எவர் தலையில் கட்டுவது ?
இத்தனைக்கு இது முதல் தடவை அல்லவே ? ஒவ்வொரு திங்கள் கிழமையும் CBS அலுவலகங்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அல்லவா நம் அப்பாவி ஊழியன் உள்ளே நுழைய வேண்டி உள்ளது ? .
இதற்கெல்லாம் ஏன் INFOSYS COMPANY மீது
சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை ? .
ஏன் நஷ்ட ஈடு கோரவில்லை ?
ஏன் CONTRACT ஐ ரத்து செய்யவில்லை ?
ஏன் BLACK LIST செய்யவில்லை ?
ஓ ! அதெல்லாம் மேலிடத்து சமாசாரமோ ? இருக்கட்டும் ...
அப்படியே இருக்கட்டும் ...
அது எங்கள் வேலையில்லை என்றாலும் கூட ... என் அப்பாவி ஊழியனை ஏன் கொடுமைப் படுத்துகிறீர்கள் ?
ஏன் இந்த 'பேய்' வேகம் ? ' ஓட்டைச் சட்டி' என்று இத்தனை மாதங்களுக்குப் பிறகு புரிந்த பின்னுமா MIGRATION இல் வேகம் ?
இத்தனை பிரச்சினை இருக்கும் போது எந்த மாநிலங்களிலும் இல்லாமல் இங்குமட்டும் , ஏன் இந்த வேகம்? சற்று நிறுத்திதான் செய்யலாமே ?
இத்தனைக்கும் வங்கித்துறையில் இன்று பல நிறுவனங்கள் 'FINACLE ' சரியில்லை என்று கழற்றி விடுவதாக பத்திரிகை செய்தி தினம் தோறும் வருகிறதே ? பார்க்கவில்லையா ?
"United Bank of India (UBI), which markets itself as 'the bank that begins with U', has taken a U-turn a day after it blamed deficiencies in Infosys' Finacle software" ...BUSINESS STANDARD - 07.01.2015.
எது என்ன ஆனால் என்ன ? ... அஞ்சல் ஊழியன்... தமிழக அஞ்சல் ஊழியன் ... பன்னாட்டு நிறுவனங்களின் சோதனை எலிகளாக்கப்பட்டு வருகின்றான் ... இது சரியா ?
இது எவருடைய குற்றம் ? காலத்தின் குற்றமா ? கர்த்தாவின் குற்றமா ?
தேவை மறு பரிசீலனை ....
சொல்லிப் பார்க்கிறோம் ....
கேட்டுப் பார்க்கிறோம் ....
எழுதிப் பார்க்கிறோம் ....
பிரச்சினை தீரவில்லை எனில் ...
போராட்டம் ஒன்றே வழி என்று நம்மைத் தள்ளுவார்களேயானால் ...
வேறு வழியில்லை ..களம் இறங்கிடுவோம் ..
பிரச்சனைகளை வீதிக்கு கொண்டுவருவோம் ...
சாவதற்கு நாம் சோதனை எலிகளல்ல என்று காட்டுவோம் ....
பால் கொடுத்து உயிர்காக்கும் பசுக்கள் ...
பாதிப்பு வந்தால் கொம்பு சுழற்றி களம் இறங்கும்
என்பதை புரிய வைப்போம் ...
விரைவில் போராட்டத்திற்கு தயாராவோம் !