இரயில்வே துறையில் 100% அந்நிய முதலீடு கொண்டு வரப்படும் என்றும் உடனடியாக ஒன்பது ரயில் நிலையங்கள் தனியார் வசம் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் தற்போது நம் பாரதப் பிரதமர் அவர்கள் கடந்த 25.12.2014 அன்று வாரணாசியில் நடைபெற்ற கூட்டத்தில் ரயில்வே துறை தனியார் மயம் ஆக்கப்படாது என்று பேசியுள்ளார்.
இது குறித்து ரயில்வே துறையின் AIRF சம்மேளன பொதுச் செயலரும் JCM NATIONAL COUNCIL இன் ஊழியர் தரப்பு செயலருமாகிய தோழர். சிவா கோபால் மிஸ்ரா பாரதப் பிரதமர் உயர்திரு . மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை கீழே பார்க்கவும்.
நம் துறையிலும் முன்னாள் CABINET SECRETARY திரு. T.S.R.சுப்பிர மணியன் அவர்கள் தலைமையிலான TASK FORCE குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. அதில் நம் இலாக்கா 6 பகுதி களாகப் பிரிக்கப்பட்டு அதில் 5 பகுதிகள் CORPORATISE செய்யப் பட வேண்டும் என்றும் அந்நிய முதலீடு அதில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தனது பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது. எனவே இது குறித்து உடனடியாக நாம் நடவடிக்கையில் இறங்கிட வேண்டும் என்று மத்திய சங்கங்கள் மற்றும் சம்மேளனத்தை நாம் வேண்டுகிறோம்.