Thursday, January 29, 2015

TN CONFEDERATION MEETING HELD AT SHASTRI BHAVAN ON 28.01.2015

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில சிறப்புக் கூட்டம் கடந்த 28.01.2015 அன்று மதியம் 01.00  மணியளவில்  சென்னை சாஸ்திரி பவன்  கூட்ட அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.  

தொழிற் சங்க நடவடிக்கைகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட  சென்னை கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு  ஆதரவாகவும் , கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்தின் தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும்  மத்தியசங்க அழைப்பை ஏற்று   இந்தக் கூட்டம் நடைபெற்றது. மேலும்  சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் தோழர். ஜெயசீலன் நினைவாகவும்  சிறப்புக் கருத்தரங்கு  நடைபெற்றது.

கூட்டத்திற்கு  மகா சம்மேளன மாநிலத் தலைவர் தோழர். J . ராமமூர்த்தி தலைமை தாங்கினார், சாஸ்திரி பவன் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலர்  தோழர். சாம்ராஜ் வரவேற்புரை யாற்றினார் . நிகழ்ச்சி தொகுப்பினை  மாநிலப்  பொருளாளர் தோழர். சுந்தரமூர்த்தி அவர்கள் அளித்திட , நினைவேந்தல் உரையை  பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள்  ஆற்றிட ' HIRE  AND  FIRE ' என்ற தலைப்பில்   நோக்கியா , ஹூண்டாய் , TCS , IBM  போன்ற பன்னாட்டு நிறுவனங்களில்  ஆயிரக்கணக்கில்  திடீர்  ஆட்குறைப்பு மற்றும் இன்றைய தினம் அற்றைக்  கூலிகளாய்  தொழிலாளர் படும் அவதி, இதே நிலை  மைய அரசின் கொள்கைகளால் நாளைய  தினம்  அரசுத் துறை , பொதுத் துறை ஊழியர்கள்  அடிபடப் போகும் அவலம் குறித்தும்  இவற்றை எதிர்த்திட  பரந்த அடிப்படையில்  உழைக்கும் வர்க்கம்  ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தையும்  விரிவாகவும் விளக்கமாகமும்  CITU  வின் மாநிலத் தலைவரும்  சட்ட மன்ற உறுப்பினருமான தோழர். A . சௌந்தரராஜன் அவர்கள்  எடுத்துரைத்தார்.

நூற்றுக் கணக்கான  மத்திய அரசு ஊழியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டது  சிறப்பாக அமைந்தது.  கல்பாக்கம் தோழர்களுக்கு ஆதரவாக  கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  கல்பாக்கம் நிர்வாகத்திற்கும்  மத்திய சங்கத்திற்கும் அனுப்பப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம் .