வடசென்னை கோட்டத்தின் அமிஞ்சிக்கரை அஞ்சலக பிரச்சினை சம்பந்தமாக நேற்று (08.01.2015) சென்னை பெருநகர மண்டல PMG அவர்களிடம் மாநிலச் சங்கத்தின் மூலம் பிரச்சினை எடுத்துச் செல்லப் பட்டது. அதன் கடித நகலை கீழே காணவும்,.
அந்தக் கடிதத்தின் மீது , இந்தப் பிரச்சினையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் , அந்த அலுவலகம் MERGER செய்யப்படாது என்பதற்கு உத்திரவாதமாக, " SSP HAS BEEN DIRECTED TO ACTIVELY LOOK FOR ALTERNATE ACCOMMODATION IN AMINJIKARAI AREA " என்ற பதிலையும் PMG, CCR அவர்கள் நேற்றைய தேதியிலேயே (08.01.2015) நமது மாநிலச் செயலருக்கு அளித்துள்ளார் . அந்தப் பதிலையும் கீழே பார்க்கவும்.
நேற்றைய தேதியிலான அவரது தபால் தலை வெளியிடும் 'TIGHT SCHEDULE' க்கு மத்தியிலும் நமக்கு இந்த பதில் அளிக்கப்பட்டிருப்பதற்கு நமது பாராட்டுக்கள் ! மற்றும் நன்றி !அவரது வாக்குறுதியை SSP வடசென்னை அவர்கள் காப்பாற்றிட உரிய நடவடிக்கை உடன் எடுக்க வேண்டுகிறோம் !