Wednesday, January 7, 2015

KRISHNAGIRI DIVL CONFERENCE A GRAND SUCCESS !

கிருஷ்ணகிரி கோட்டத்தின் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு கடந்த 04.01.2015 ஞாயிறு அன்று கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலக வளாகத்தில் கோட்டத் தலைவர் தோழர். V . ராமமூர்த்தி அவர்கள் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது . கொடியேற்று நிகழ்வுக்குப் பின்னர் கோட்ட உதவிச் செயலர் தோழர். G . சிவசங்கரன் அவர்கள் வரவேற்புரையாற்ற,  கோட்டச் செயலர் தோழர். S.செல்வம் அவர்கள் ஈராண்டு அறிக்கை சமர்ப்பிக்க , கோட்ட நிதிச் செயலர் தோழர். K . சத்திய பூங்குன்றன் அவர்கள் வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார்.  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தியின்  துவக்க உரையில்  அஞ்சல் இலாக்காவின் இன்றைய நிலை, TASK  FORCE  இன் அறிக்கை, ஏழாவது ஊதியக் குழுவுக்கான போராட்டங்கள்  உள்ளிட்ட பிரச்சினைகளின் நீண்ட உரையினை அளித்தார். அதன் பின்னர் நிர்வாகிகள் தேர்வு  ஏகமனதாக நடைபெற்றது.  கீழ்கண்ட நிர்வாகிகள்  மீண்டு ஏகமனதாக நடப்பு காலத்திற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

தலைவர் :  தோழர். V . ராமமூர்த்தி 
கோட்டச் செயலர் தோழர். S . செல்வம் 
கோட்ட நிதிச் செயலர் : தோழர். K . சத்தியபூங்குன்றன் 

இதன் பின்னர்  நடைபெற்ற பொது அரங்கு நிகழ்ச்சியில்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் மாநிலச்  செயலர்  தோழர். V . பார்த்திபன்,  மேற்கு மண்டலச் செயலர் தோழர். C . சஞ்சீவி  ஆகியோர் சிறப்பான உரையினை  அவைக்கு அளித்தனர். தருமபுரி அஞ்சல் மூன்று முன்னாள் செயலர் தோழர். K . அறிவழகன், இந்நாள் செயலர் தோழர். V . பழனிமுத்து, அஞ்சல் அஞ்சல் நான்கின்  கிருஷ்ணகிரி கோட்டச் செயலர் தோழர். S . மணி உள்ளிட்ட  பல்வேறு பொறுப்பாளர்கள்  கலந்துகொண்டு  மாநாட்டில் வாழ்த்திப் பேசினார்.  பொது அரங்கு நிகழ்வுக்குப் பின்னர் மாநாடு இனிதே நிறைவுற்றது. மாநாட்டு ஏற்பாடுகளை  சிறப்பாகச் செய்திருந்த கோட்டச் செயலர்  தோழர். S . செல்வம் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்.  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட புகைப் படங்களில் சிலவற்றை கீழே காணலாம் .