Saturday, July 27, 2013

CONGRATS TO AMBATTUR BRANCH FOR ORGANIZING TRADE UNION STUDY CAMP

கடந்த ஜூன் திங்களில் நமது மாநில மாநாடு நடை பெற்ற பின்னர், முதன் முதலில்  அம்பத்தூர் கிளையில்  ஊழியர்களை விழிப்புணர்வு அடையச் செய்திட  ஒரு தொழிற் சங்க பயிலரங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது வரவேற்கத் தக்கது . இந்த முயற்சிக்கு அந்த கிளைச் சங்க நிர்வாகிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

 இது போல தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும்  ஊழியர்கள் பயிற்றுவிக்கப் பட்டால்  நிச்சயம் அது ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் .  நமது மாநிலச் சங்கத்தின் சார்பில்  மண்டல ரீதியிலான  கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டமும் , தொழிற் சங்க பயிற்சி வகுப்பும்  முதலில் தென் மண்டலத்தில் ஏற்பாடு செய்யப் படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  இடமும் தேதியும்  விரைவில் அறிவிக்கப் படும்!