அன்புத் தோழர்களே ! வணக்கம் ! கடந்த பல காலங்களில் GDS ஊழியர்களுடைய கோரிக்கைகளுக்காக அஞ்சல் துறையில் நாம் மட்டுமே தனியாக போராடி வந்தோம் . நம்முடைய NFPE சம்மேளனத்திலும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்திலும் ஒற்றுமை ஏற்பட்டு, அதன் தொடர் விளைவாக நம்முடைய தலைவர்கள் தோழர் KR , KVS மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பொறுப்புக்கு வந்த பின்னர் மிகப் பெரும் மாற்றங்களை நாம் கண்டுவருகிறோம்
கடந்த 12.12.2012 ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மூலம் அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களும் ஒரு சேர GDS ஊழியர்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை மனுவினை அரசுக்கு அளித்ததை நாம் மறந்திருக்க முடியாது . INCOME TAX, CUSTOMS, CENTRAL EXCISE, CENTRAL WATER BOARD, ATOMIC RESEARCH CENTRE, CENTRAL PWD, AUDIT AND ACCOUNTS உள்ளிட்ட 36 மத்திய அரசு துறைகளின் ஊழியர் சங்கங்கள் GDS ஊழியருக்கான கோரிக்கைகளை தங்கள் மனுவில் சேர்த்து அளித்தது , GDS ஊழியர்களின் பிரச்சினைகளை வெளி உலகத்துக்கு கொண்டுவர வழி வகுத்தது .
தற்போது அதனையும் தாண்டி ரயில்வே துறையின் மிகப் பெரிய சங்கமான AIRF , பாதுகாப்பு துறையின் மிகப் பெரிய சங்கமான AIDEF ஆகியவற்றையும் உள்ளடக்கி போராட்ட திட்டம் வகுக்கப் பட்டுள்ளது . அந்த ஒட்டு மொத்த போராட்ட வியூகத்தின் கோரிக்கைகளில் GDS ஊழியர்களின் கோரிக்கையும் சேர்க்கப் பட்டு , ஒரு சேர 36 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இன்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. இது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
கடந்த 29/6/2013 அன்று டெல்லியில் AIRF தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரெயில்வே , பாதுகாப்பு துறை மற்றும் மத்திய அரசு ஊழிய்ர் மகா சம்மேளனத்தின் தலைவர்கள் கூடி எடுத்த முடிவின் படி ஏழாவது ஊதியக்குழு அமைத்தல் , பஞ்சப்படியை அடிப்படை ஊதியத் துடன் இணைத்தல் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் , அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப் புற அஞ்சல் ஊழியர்களை நிரந்தம் செய்தல் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அமைச்சரவை ச் செயலரிடம் கோரிடவும் , துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த சங்கங்கள் சம்பந்தப்பட்ட துறைசெயலரிடம் தந்திடவும் , இது தொடர்பான மேல் நடவடிக்கை வருகிற ஆகஸ்ட் 2013 முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது .
இது சம்பந்தமான செய்தியை கீழே பார்க்கவும்.
CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS
(Central Head Quarters)
1ST FLOOR, NORTH AVENUE POST OFFICE BUILDING , NEW DELHI – 110001
Dear Comrade,
The representatives of AIRF, AIDEF, Confederation met at AIRF Office today under the Chairmanship of Com. Umraomal Purohit. President, AIRF. The following Comrades were present.
Com. U. M. Purrohit, President AIRF
Com. Shiv Gopal Mishra, General Secretary, AIRF
Com. S. N. Pathak, President AIDEF
Com. C. Srikumar General Secretary AIDEF
Com. J. S. Sharma, Org. Secretary: AIDEF
Com. S. K. Vyas, Advisor, Confederation.
Com. K. K. N. Kutty, President, Confederation.
Com. M. Krishnan, Secretary General, Confederation
Com. Virigu Bhattacharjee, Finance Secretary Confederation.
The meeting decided to forge a Joint Council of Action to pursue the enclosed Charter of Common Demands of CGEs. Com. Umraomal Purohit President AIRF will be the Chairman and Com. Shiv Gopal Mishra will be its Convenor. The following shall be the members of the Council.
1. Com. U.M. Purohit – AIRF
2. Com. Shivgopal Mishra-AIRF
3. To be nominated by AIRF
4. Com. S.N. Pathak – AIDEF
5 Com. Sree Kumar –AIDEF
6. To be nominated by AIDEF
7. Com. S.K. Vyas – Confederation
8. Com. KKN Kutty – Confederation
9. Com. M. Krishnan- Confederation
The following demands were included in the Common Charter of demands:
1. Set up the 7th CPC and frame its terms of reference after consultation with Staff Side.
2. Merge DA with pay for all purposes.
3. Scrap the New Contributory Pension Scheme.
4. Regularize (a) Gramin Dak Sevaks of Postal Department.(b)Daily rated workers , (c) Contract Labourers:
5. Remove 5% Ceiling on Compassionate appointments.
6. Settle all 6th CPC anomalies raised in the National Anomaly Committee and implement the Arbitration Awards.
7. Remove Ceiling of Rs. 3500 on computation of Bonus.
All organizations may include the department –specific and other demands in Part B of the Charter and seek settlement thereof with the appropriate authorities.
The meeting also decided to submit the Charter of demands to the Cabinet Secretary and seek negotiated settlement.
The Council will meet again in the first week of August 2013 to decide upon the date of National Convention and other programmes of action in pursuance of the Charter of demands.
(M. Krishnan)
Secretary General