Monday, July 29, 2013

TRADE UNION STUDY CAMP AT AMBATTUR BRANCH , A GRAND SUCCESS

அம்பத்தூர் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு  மற்றும் GDS  கிளைகளின் சார்பாக கடந்த 28.07.2013 அன்று திருவொற்றியூர் அஞ்சலகத்தில் நடத்தப் பட்ட தொழிற் சங்க பயிலரங்கு  மிகச் சிறப்பாக - கலந்து கொண்ட அனைவரின் பாராட்டினையும் பெற்றது.

காலை சுமார் 10.30 மணியளவில்  அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் C . மோகன் அவர்கள் தலைமையேற்க , அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் G . சுரேஷ் பாபு அவர்களின் வரவேற்புடன்  நிகழ்ச்சி இனிதே துவங்கியது . முதலில் ' NFPE  கிராமப் புற அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தோற்றமும் இன்றைய நிலையில் அவர்களின் நிலைமையும், நம் தொழிற் சங்கக் கடமையும்' என்ற தலைப்பில்  AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர் R . தனராஜ்  அவர்கள்  வகுப்பினைத் துவக்கி வைத்து சிறப்பித்தார். 

அடுத்து ' அஞ்சல் தொழிற் சங்க வரலாறும், இன்றைய தொழிற்சங்க கடைமையும் ' என்கிற தலைப்பில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி அவர்கள் ,  நமது தொழிற் சங்கம் தோன்றிய வரலாறு, தலைவர்களின்  அளப்பரிய தியாகம்,  நாம் பெற்ற வெற்றிகள் , இன்றைய சூழலில்  அரசின் நிலைமை, இலாக்காவின் நிலைமை, இன்று நம் முன்னே உள்ள கடமை  குறித்து  சிறப்பானதொரு வகுப்பினை  அளித்தார். 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ' இலாக்கா விதிகளும், நடத்தை விதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம் , CONTRIBUTORY  NEGLIGENCE ' உள்ளிட்ட விதிகள்  இவற்றில் , ஊழியர் பாதுகாப்பு சட்டங்கள்'   குறித்து  மிகத் தெளிவாக  நம்முடைய  அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் தோழர். KVS  அவர்கள் வகுப்பினை  எடுத்தார்கள் . 

இதன் பிறகு  சுமார் 01.00 மணி நேரம்  ஊழியர்களின் சந்தேகங்களுக்கு தோழர்  KVS  அவர்களும்  J .R . அவர்களும்  பதில் அளிக்க , கேள்வி- பதில் அரங்கம் களை  கட்டியது .   கலந்துகொண்ட ஊழியர்கள் ஒருவர் கூட  மாலை 06.00 மணிவரை  அரங்கினை விட்டு வெளியேற வில்லை என்பது  நிகழ்ச்சியின் மீது  அவர்கள்  கொண்ட ஈடுபாட்டினை  எடுத்துக் காட்டுவதாக அமைந்தது . 

சுமார் 160 ஊழியர்கள்  கையொப்பமிட சுமார் 180 ஊழியர்கள் கலந்து கொண்டது  நிகழ்ச்சியின்  சிறப்பை வெளிப்படுத்தியது . நிகழ்ச்சியில் தென் சென்னை அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். ராஜேந்திரன் அவர்களும் திருவண்ணாமலை அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் பிச்சாண்டி அவர்களும், அம்பத்தூர் கோட்டச் சங்க வழிகாட்டி தோழர். G .C . நரசிம்மலு உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள்  மற்றும்   இதர தோழர்களும் கலந்து கொண்டனர். 

பயிலரங்கு நிகழ்ச்சியினை  அஞ்சல் மூன்றின்  கிளைச் செயலர் தோழர்.
S . அசோகன் அவர்களும், அஞ்சல் நான்கின்  கோட்டச் செயலர் தோழர்.G . சுரேஷ் பாபு அவர்களும், AIPEU  GDS  NFPE  இன்  கோட்டச் செயலர் தோழர். 
S . விஜயகுமார் அவர்களும்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியதற்கு  நம்  மாநிலச் சங்கத்தின் மனம் திறந்த  பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! 

இதுபோன்ற  தொழிற் சங்க பயிற்சி வகுப்புகள்  இனி ஒவ்வொரு கோட்டத்திலும்  நடைபெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.! கோட்ட/கிளைச் செயலர்கள் அதற்கான முயற்சியில் ஈடு பட வேண்டுகிறோம்!