பாண்டிச்சேரி கோட்டத்தில் 38 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி NFPE /FNPO அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் சார்பில் அளிக்கப்பட வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி கடந்த 29.06.13 அன்று PMG , CCR அவர்களால் இன்று (01.07.2013) மாலை பேச்சு வார்த்தைக்கு மாநிலச் சங்கங்கள் அழைக்கப் பட்டிருந்தது குறித்து ஏற்கனவே அஞ்சல் மூன்று வலைத் தளத்தில்தெரிவித்திருந்தோம்.
அதன் படியே மாலை 04.00 மணியளவில் NFPE /FNPO அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு மாநிலச் செயலர்கள் , பாண்டிச்சேரி கோட்ட சங்கத்தின் NFPE /FNPO கோட்டச் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம். பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் நடைபெற்றது . கோரிக்கை பட்டியலில் உள்ள ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் தனித்தனியே விவாதித்தோம். இறுதியாக சுமுகமான தீர்வு எட்டப்பட்டது . பேச்சு வார்த்தையின் MINUTES COPY அளித்திடக் கோரினோம் . அதன்படியே நாளை RECORDED MINUTES அளித்திட PMG , CCR அவர்கள் ஒப்புதல் அளித்தார்கள் .
MINUTES நகல் கிடைக்கப் பெற்றவுடன் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்வது குறித்த அறிவிப்பை கலந்து பேசி தெரிவிப்பதாக அறிவித்தோம். பேச்சு வார்த்தையில் சுமுகமான அணுகுமுறையை மேற்கொண்ட PMG ,CCR திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கும் , DPS ,CCR திரு . J .T . வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி .
பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள் :-தோழர் J.R., மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று (NFPE ), தோழர்.G.P. முத்துகிருஷ்ணன் , மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று (FNPO ), தோழர். குணசேகரன், மாநிலச் செயலர் , P 4, FNPO , தோழர் . சத்திய முர்த்தி , கோட்ட தலைவர், NFPE , அஞ்சல் மூன்று, தோழர். கலியமுர்த்தி , கோட்டச் செயலர் NFPE அஞ்சல் மூன்று, தோழர். பன்னீர்செல்வம் , கோட்டச் செயலர் , NFPE அஞ்சல் நான்கு , தோழர். தாமோதரன் , கோட்ட நிதிச் செயலர், NFPE , அஞ்சல் மூன்று, மற்றும் FNPO வின் P 3, P 4, GDS கோட்டச் செயலர்கள் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் .
இதுவரை நாம் அளித்த பல்வேறு ஊழியர் பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்தி , தொழிற் சங்கங்களை மதித்து முறையாகப் பேச்சு வார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வரும் மதிப்புக்குரிய PMG , CCR திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் சிறப்பு நன்றியினை தெரிவிக்கிறோம்.
இந்த நிலை தொடரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நம் ஊழியர் தரப்பு ஒத்துழைப்பு என்றும் அவருக்கு அளிக்கப் படும் என்று உறுதி கூறுகிறோம். இதுபோல மற்றைய மண்டலங்களிலும் ஊழியர்கள் குறைகள் பரிவுடனும், சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும் தீர்க்கப் பட்டால் நமது மாநில அஞ்சல் நிர்வாகம் மக்கள் மத்தியில் நிச்சயம் நல்ல பெயர் பெறும் என்று நாம் இந்த வலைத் தளத்தின் மூலம் அனைத்து பகுதியினருக்கும் தெரிவிக்கிறோம்.
ஏனெனில் , இன்று நமது தொழிற் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை, தனி நபர் பிரச்சினை குறித்து அல்ல. மக்கள் சேவையை மேம்படுத்துவது குறித்தே. இந்த கோரிக்கைகள் எல்லாம் சேவை மேம்பாடு அடையும் வகையில் நிர்வாகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளே.
அதிகாரிகள் 'HATE POLICY' யைக் கைவிட்டு ஊழியர் நலன் நோக்கினால் நிச்சயம் அதற்கான முழு வெற்றி கிடைக்கும் என்பதனையும் நாம் தெரிவிக்கிறோம். அந்த திசை நோக்கி நாம் பயணிப்போம். மாநில /மண்டல மட்ட அதிகாரிகளையும் அந்த வகையில் சிந்தித்திட வேண்டுகிறோம்.
MINUTES COPY நகல் கிடைத்தவுடன் இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கிறோம்.
போராட்ட பாதையை மேற்கொண்டு உறுதியாக நின்ற பாண்டிச்சேரி கோட்டத்தின் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு NFPE /FNPO கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் , கோட்டத்தில் பணியாற்றும் இதர தோழிய /தோழர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் !.
இது போன்ற ஆரோக்கியமான நிகழ்வுகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ந்திட, அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் நமது நல்லிணக்க வெளிப்பாடாக இதனை தெரிவித்திட அனைத்து கோட்ட/ கிளைகளின் வலைத் தளங்களிலும் இதனை பிரசுரித்திட வேண்டுகிறோம்.
நன்றியுடன்
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று , NFPE , தமிழ் மாநிலம் .