சென்னை மத்திய கோட்டத்தின் MINUS BALANCE RECOVERY பிரச்சினையில் நமது மாநிலச் சங்கத்தின் மூலம் இலாக்கா சட்ட விதிகளை சுட்டிக் காட்டி சகட்டு மேனிக்கு ஊதியப் பிடித்தம் செய்வதை எதிர்த்து PMG, CCR அவர்களிடம் கடந்த 19.04.2013 அன்று கடிதம் அளித்து பேசியிருந்தோம் . அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் , ஊழியர்களுக்கு போதிய வாய்ப்பு அளித்திடாமல் எந்தவொரு ஊதியப் பிடித்தமும் செய்யப் பட மாட்டாது என்றும் PMG, CCR அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள் .
அதன் அடிப்படையில் தற்போது எந்த விதங்களில் சட்டங்கள் பின் பற்றப் படும் என்பதை தனது பதிலாக நமக்கு அளித்துள்ளார்கள் . அதன் நகலை கீழே உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம். இது நமக்கு முழு திருப்தி இல்லையெனினும் , தற்போது உயர் அதிகாரியே இந்த விதங்களில் சட்டங்கள் பின் பற்றப் படும் என்பதனை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளது நமது சங்க நடவடிக்கை களுக்கு கிடைத்த வெற்றியே !
உங்கள் கோட்டத்தில் இந்த விதிகள் பின்பற்றப் பட வில்லையாயின் உடன் மாநிலச் சங்கத்தின் பார்வைக்கு இதனை கொண்டு வரவும் . பாதிக்கப் பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப் படும் SHOW CAUSE NOTICE க்கு பதிலும் நமது மாநிலச் சங்கம் அளித்த மாதிரி பதில் படிவம் பார்த்து , அதன் படி அந்தந்த கோட்டங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தகுந்த வண்ணம் பதில் அளிக்கவும்