தமிழகத்தில் தேங்கிக் கிடக்கும் LSG, HSG II, HSG I மற்றும் POSTMASTER GRADE II, POSTMASTER GRADE III ஆகிய பதவி உயர்வுகள் உடன் அளிக்கப் பட வேண்டும் என்று நம் மாநிலச் சங்கம் பல முயற்சிகள் எடுத்ததை ஏற்கனவே பலமுறை நம் வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
இதன் அடிப்படையில் நம்முடைய மாநிலத் தலைமை அலுவலகத்தில் புதிதாக பதவியில் சேர்ந்த உதவி இயக்குனர் (STAFF) அவர்கள் விடாத முயற்சி எடுத்ததன் பலனாகவும் நம்முடைய புதிய CHIEF PMG அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்ததன் காரணமாகவும் , கடந்த வாரத்தில் (4.4.2014) அன்று தமிழகத்தில் 12 பேருக்கு HSG II பதவி உயர்வும் 5 பேருக்கு POSTMASTER GRADE III பதவி உயர்வும் 3 பேருக்கு POSTMASTER GRADE II பதவி உயர்வும் அளிக்கப் பட்டது. தற்போது 23 பேருக்கு HSG I பதவி உயர்வு அளிக்கப் பட்டு பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதன் நகல் கீழே பார்க்கவும்.
இனி LSG பதவி உயர்வு மட்டும் கிடப்பில் உள்ளது . சில தனி நபர் நீதி மன்ற வழக்குகளில் தடை உத்திரவு அளிக்கப் பட்டிருந்தாலும் , அது குறித்து நீதி மன்றத்தில் பதில் அளிக்கப் பட்டுள்ளதாகவும் , எப்படி இருந்த போதிலும் DATE OF COFIRMATION அடிப்படையில் இந்த LSG பதவி உயர்வு என்பது அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் இதற்கு CPMG அவர்கள் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் மாநில தலைமை அலுவலகத்தின் உதவி இயக்குனர் திரு. ஆறுமுகம் அவர்கள் தெரிவித்துள்ளார். நிச்சயம் அந்தப் பட்டியல் நாம் பெறுவோம்.
தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்த தேக்க நிலை உடைக்கப்படும். இதன் மூலம் ஏற்படும் RESULTANT எழுத்தர் காலியிடங்களையும் உடன் நிரப்பிட நிச்சயம் கோருவோம் என்பதை மாநிலச் சங்கத்தின் சார்பாக நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது CPMG திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் ASST DIRECTOR (STAFF) திரு . ஆறுமுகம் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.