Tuesday, April 8, 2014

SPECIAL MEETING AT VIRUDHUNAGAR DIVISIONAL BRANCH

விருதுநகர் சிறப்புக் கூட்டம் 

கடந்த 04.04.2014 அன்று  மாலை விருது நகர் தலைமை அஞ்சலகத்தில் விருதுநகர்  அஞ்சல் மூன்று மற்றும்  அஞ்சல் நான்கு கிளைகளின் சிறப்புக் கூட்டம்  அஞ்சல் மூன்று கோட்டத் தலைவர் தோழர். M . தாமோதரன் , அஞ்சல் நான்கு கோட்டத் தலைவர்  தோழர். M . சுப்பையா ஆகியோரது கூட்டுத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் M . மாரீஸ்வரன் அவர்களும் அஞ்சல் நான்கின்  கோட்டச் செயலர் தோழர். M . சோலையப்பன் அவர்களும்  சிறப்பாக செய்திருந்தனர். 

கூட்டத்தில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.J .R .,  மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் , அஞ்சல் நான்கின் மாநிலத் தலைவர் தோழர். G . கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு  இலாக்காவின் இன்றைய நிலை , நம்முடைய அகில இந்திய சங்கம், மற்றும் சம்மேளனம் எடுத்துள்ள நடவடிக்கைகள்,  ஏழாவது ஊதியக் குழு தொடர்பான எதிர்வரும் போராட்டங்கள் , மற்றும் மாநிலச் சங்கத்தின் செயல்பாடு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினர் .

கூட்டத்தின்  அஞ்சல் நான்கின் மண்டலச் செயலர் தோழர் முருகேசன் , அருப்புக் கோட்டை கிளை அஞ்சல் மூன்றின் செயலர்   தோழர். M . முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்  கூட்டத்தில் தல மட்ட பிரச்சினைகள் பல விவாதிக்கப் பட்டன .  இதன் மீது உடன் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர்  உறுதியளித்தார். 

இறுதியில்  நன்றி தெரிவித்து  கோட்டச் செயலர்  பேசும் போது , கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு  தற்போது  மாநிலச் செயலர் மற்றும் மாநிலத் தலைவர் விருது நகர் கிளைக்கு வருகை புரிந்துள்ளனர்  என்பது எங்களுக்கு மிகுந்த   உற்சாகத்தை ஏற்படுத்துகிறது . இந்த நிலை   தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  

நிச்சயம்  நமது மாநிலச் சங்கம்  எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து கோட்ட/ கிளைகளையும் ஒன்றாக மதித்து அவர்களின் பிரச்சினையில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் . தீர்த்துவைத்திட போராடும் என்பதை மாநிலச் செயலர் உறுதியாகத் தெரிவித்தார்.  கூட்டம்  இரவு சுமார் 09.30 மணியளவில் இனிதே முடிவுற்றது. சுறுசுறுப்பாகச் செயல்படும்  விருதுநகர் இளைய தோழர்களுக்கு, குறிப்பாக , விருதுநகர் கோட்டச் செயலர் தோழர் . மாரீஸ்வரன் அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !  அவர் பணி  சிறக்கட்டும் !