நம்முடைய அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய
ராணிபேட்டை கிளையின் அஞ்சல் மூன்று சங்கத்தின் தலைவர்
தோழர். G . மணி அவர்கள்
(கை பேசி எண் : 9994767650)
இன்று (30.04.2014) நமது இலாக்காவில் இருந்து பணி நிறைவு பெறுகிறார்.
அறிவும் ஆற்றலும் , எந்த நேரத்திலும் நமது சங்கத்தை விட்டுக் கொடுக்காத, ஊழியர் நலனுக்கான , எந்த நேரத்திலும் போராடும் , போர்க்குண மிக்க , அதே நேரத்தில் நேர்மையான ஒரு மூத்த தொழிற்சங்க வாதி , தோழர் மணி அவர்கள் ஆவார்.
தன்னுடைய பணிக் காலத்தில் பல்வேறு பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டு, தொழிற்சங்க காரணங்களுக்காக பல தண்டனைகள் பெற்ற தியாக உள்ளம் படைத்த தோழர் .
அவர்தம் தொழிற் சங்கப் பணியை நமது மாநிலச் சங்கம் நெஞ்சாரப் பாராட்டுகிறது. தனது ஓய்வுக் காலத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று நீடு வாழ அவரை நாம் நெஞ்சார வாழ்த்துகிறோம்.
இவண்
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்.