அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! ஏற்கனவே துரித அஞ்சல் பட்டுவாடா பணி எதிர் வரும் 'நல்ல வெள்ளி ' அன்று தென் மண்டலத்தில் செய்திட உத்திரவிடப்பட்டிருந்தது குறித்து பல கோட்டங்களில் இருந்து புகார் வந்த வண்ணம் இருந்தது .
அதன் காரணமாக நம்முடைய மாநிலச் சங்கத்தில் இருந்து நம்முடைய CPMG அவர்களுக்கு பிரச்சினையை கடிதம் மூலம் எடுத்தது மட்டுமல்லாமல் நம்முடைய தலைமையிடத்து நெறியாளர் (DPS HQ) அவர்களையும் சந்தித்து பேசினோம். பண்டிகை நாளில் பட்டுவாடா குறித்து ஏற்கனவே CPMG அலுவலகத்தில் இருந்து மதுரை மண்டல அலுவலகத்திற்கு INSTRUCTIONS கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதுகுறித்து தென் மண்டல PMG அவர்களிடம் பேசுவதாகவும் நம்மிடம் தெரிவிக்கப் பட்டது.
ஆனால் தென் மண்டல அதிகாரி அவர்கள் 'நல்ல வெள்ளி ' அன்று பட்டுவாடா செய்திட மண்டல அலுவலக உத்திரவு எதுவும் இடப்படவில்லை என்று \தெரிவித்துள்ளார்கள். இது தற்போது மட்டுமல்ல . இதற்கு முன்னரும் பல முறை நடந்துள்ளது. மண்டல அலுவலகத்தில் இருந்து உத்திரவு வெளியிடாதபோது, கீழே உள்ள இரண்டாம் நிலை அதிகாரிகள் தேவையில்லாமல் ஊழியர்களையும் பிரச்சினைக்குள்ளாக்கி , தொழிற்சங்கத்தையும் தேவையில்லாமல் மேல் மட்டத்தில் புகார் செய்திட வைத்து , மேல்மட்ட அதிகாரிகளின் மற்றும் PMG, SR அவர்களின் நேரத்தை விரயம் செய்வது ஒரு தவறான நடைமுறையாகும் .
இது குறித்து நம்முடைய மாநிலச் சங்கத்தின் 11.04.2014 அன்று புத்தாண்டு விடுமுறை பணி ரத்து செய்திட அளித்திட்ட கடிதத்தின் கடைசி பத்தியில் தெளிவாக மேல் மட்ட அதிகாரிகளின் பார்வைக்கு நாம் தெரிவித்திருந்தோம் என்பதை நினைவு படுத்துகிறோம்.
மேலும் தென் மண்டலத்தில் இது போன்ற நிகழ்வுகள் பல முறை நடைபெற்றுள்ளது குறித்து நாம் பலமுறை தென் மண்டல PMG அவர்களிடம் MEMORANDUM அளித்து பேச்சு வார்த்தைக்கு செல்லும் போது தெரிவித்துள்ளோம். கீழ் மட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக இப்படி பிரச்சினைகளை எழுப்புவதை தவிர்த்தால் உயர்மட்ட நிர்வாகத்திற்கு தேவையில்லாமல் தொந்திரவு ஏற்படாது. என்பது நம்முடைய கருத்து. தென் மண்டல PMG அவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
எது எப்படி இருந்தாலும் மாநில நிர்வாகத்தின் தலையீட்டினால் தற்போது கீழ் மட்ட அதிகாரிகளால் இடப்பட்ட நல்ல வெள்ளி விடுமுறை நாளின் பணி, ரத்து செய்யப் பட்டுள்ளது குறித்து மாநில மற்றும் மண்டல நிர்வாகத்திற்கு நம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
குறிப்பாக இந்த பிரச்சினையில் நம்முடைய கோரிக்கையை ஏற்று CPMG அவர்களுடனும் PMG SR அவர்களுடனும் தொடர்பு கொண்டு தீர்த்து வைத்த DPS HQ மதிப்புக்குரிய A. கோவிந்தராஜன் அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பிரச்சினையில் உரிய உத்திரவு அளித்த CPMG அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி !
பட்டுவாடா பணி ரத்து செய்யப் பட்ட மண்டல அலுவலக .உத்திரவின் நகலை கீழே பார்க்கவும் :-