சிறப்பான குன்னூர் கிளை மாநாடு
குன்னூர் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு கிளைகளின் இணைந்த மாநாடு கடந்த 6.5.2012 அன்று குன்னூர் தலைமை அஞ்சலக திறந்த வெளி அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடி மற்றும் சம்மேளனக் கொடி ஏற்றுதலுடன் மாநாடு இனிதே துவங்கியது. மூத்த தோழர். R. மாதவன் அவர்கள் தலைமை ஏற்க , அஞ்சல் மூன்று கிளைச் செயலர்
தோழர் .G. சாமுவேல் ஜெயராஜ் அவர்கள் வரவேற்புரையுடன் முதலில் இணைந்த பொது அரங்கு நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
பொது அரங்கு நிகழ்ச்சியில் சம்மேளன உதவி மா பொதுச் செயலர் தோழியர். R. சீதாலட்சுமி , அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J.R., மேற்கு மண்டல செயலர் தோழர் N.S., ஊட்டி கோட்டச் செயலர் தோழர். A.M. சேகர், சேலம் மேற்கு கோட்டச் செயலர் தோழர் சஞ்சீவி , மேட்டுபாளையம் கிளையின் செயலர் தோழர். செல்வராஜ், AIPEU GDS NFPE சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். ஜகதீசையா, P 4 உதகை கோட்டச் செயலர் தோழர். R. கிருஷ்ணன் , உதகை GDS கோட்டச் செயலர் தோழர். பிரேம் ஜெயகுமார் ஆகியோர் பொது அரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர் .
மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு பொருள் ஆய்வுக் குழுக் கூட்டம் தனித் தனியே நடைபெற்றது.
அஞ்சல் மூன்று கிளைச் சங்கத்தின் நிர்வாகிகளாக கீழ்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் : தோழர். K. பாலசுப்ரமணியன் ,APM, COONOOR HO.
செயலர் : தோழர். G. சாமுவேல் ஜெயராஜ் , P.A., COONOOR HO.
பொருளர் : தோழர். A. சித்திர பானு , S.A. COONOOR HO.
மேலும் கிளைச் சங்கத்தின் சார்பாக மகளிர் குழு (MAHILA COMMITTEE)
அமைக்கப் பட்டது .
கன்வீனர் : தோழியர். பூமா , SPM, PAUSTER INSTITUTE S.O..
உறுப்பினர்கள் : " R. பேபி , P.A., COONOOR R.S. PO.
" C. பிருந்தா , P.A., COONOOR HO.
" G. லட்சுமி , ACCOUNTANT, COONOOR HO.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின்
மனம் திறந்த வாழ்த்துக்கள் .
****************************************************************************
குறிப்பு : குன்னூர் கிளையின் தலைவர் தோழர். K. பாலசுப்ரமணியன் அவர்களின் நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த MEDICAL BILL அகில இந்தியச் சங்கத்தின் தலை ஈட்டின் பேரில் PASS செய்யப் பட்டு பட்டுவாடா ஆனதற்கும் , மாநிலச் சங்கத்தின் மூலம் RJCM இல் எடுக்கப் பட்டு அவரது WELFARE உதவித் தொகை வழங்கப் பட்டதையும் நன்றி தெரிவித்து
மத்திய சங்கத்திற்கும் மாநிலச் சங்கத்திற்கும் தலா ரூ. 1000/- நன்கொடை
வழங்கினார் . அவரது பெருந்தன்மைக்கு மாநிலச் சங்கத்தின் மனம் திறந்த
பாராட்டுக்கள் . அவர் பூரண உடல் நலம் பெற மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.
********************************************************************************