1. நமது மாநிலச் சங்கம் தொடர் முயற்சி எடுத்ததன் பலனாக CCR மண்டலத்தில் அமைக்கப் பட்ட CORE BANKING TEAM என்பது தற்போது
SCRAP செய்யப் பட்டது. இது குறித்து ஏற்கனவே நாம் PMG CCR இடமும் DPS, CCR இடமும் பிரச்சினையை எடுத்துச் சென்று விவாதித்ததையும் அதற்கான கடித நகலையும் ஏற்கனவே நம் வலைத்தளத்தில் நாம் பிரசுரித் திருந்தோம் . தற்போது இது SCRAP செய்யப் பட்டு கோட்ட அளவில் மற்றப் பட்டுள்ளது . இதனால் தினம் தோறும் மண்டலம் முழுதும் சுற்றித் திரிய வேண்டிய கொடுமையில் இருந்து அதில் பணிக்கப்படிருந்த ஊழியர்கள் விடுதலை பெற்றார்கள் என்பது உண்மை.
நம் அண்ணா சாலை கிளையின் முன்னாள் கோட்டச் செயலர் தோழர் .
கிருபாகரன் தாமஸ் அவர்கள் உடல் நலம் குன்றி பாதிக்கப் பட்டுள்ளதாக நம்மிடம் புகார் செய்தார்கள் . தற்போது அவர் இதிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார் என்பது நமக்கு மகிழ்ச்சியே .
கிருபாகரன் தாமஸ் அவர்கள் உடல் நலம் குன்றி பாதிக்கப் பட்டுள்ளதாக நம்மிடம் புகார் செய்தார்கள் . தற்போது அவர் இதிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார் என்பது நமக்கு மகிழ்ச்சியே .
2. CHENNAI GPO விலிருந்து CHENNAI CITY SOUTH க்கு DEPUTATION அனுப்பப் பட்ட தோழர்/தோழியர் படிப் படியாக CHENNAI GPO விற்கு திரும்ப எடுத்துக் கொள்ளப் படுவர் என்ற CPMG அவர்களின் RJCM மீட்டிங்கில் அளித்த உத்திரவாதம் தற்போது முதற்படியாக நிறைவேற்றிட உத்திரவிடப் பட்டுள்ளது .DEPUTATION SENIORITY அடிப்படையில் முதல் இரண்டு தோழியர்கள் திரும்ப அனுப்பப் பட உள்ளனர் என்று APMG STAFF அவர்கள் தெரிவித்தார்.
3. 1.9.2008 முதல் வழங்க வேண்டிய MACP அரக்கோணம் கோட்டத்தில் பல தோழர்களுக்கு நிலுவையில் இருந்தாலும் R.O. வில் CLEAR செய்து 27.4.2012 இ ல் உத்திரவிடப்பட்டது . ஆனாலும் தோழர் . சிகாமணி , சோளிங்கர் அவர்களுக்கு இது நிறுத்தப் பட்டது . பிரச்சினையை சுட்டிக் காட்டி நாம் பேசினோம். உடனடியாக இந்தப் பிரச்சியை குறித்து கோட்டக் கண் காணிப்பாளருக்கு மண்டல அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் செய்யப் பட்டது . வெகு விரைவில் அவருக்கு உரிய காலத்திலிருந்து MACP வழங்கப் படும்.
4. புதிதாக அறிமுகப் படுத்தப் படும் வணிகப் பணிகளுக்கு , அதற்கான TIME FACTOR வகுக்கப் படாததால் , அந்தப் பணியைப் பார்ப்பதற்கான AGENCY COMMISSION இல் 25% அதில் பணியாற்றும் ஊழியருக்கு வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே நாம் உத்திரவு பெற்றதை பலமுறை நம் வலைத் தளத்திலும் , சுற்றறிக்கையிலும் தெரிவித்திரு ந்தோம் . ஆனாலும் இதுவரை
நம் தமிழ் மாநிலத்தில் ஒரு கோட்டத்தில் கூடஇதற்கான பில் போடப் பட
வில்லை என்பது வருத்தமே .
தற்போது EB BILL பெற்றிட ஒரு BILL க்கு ரூ. 10.00 கமிஷன் ஆகப் பெறுகிறோம். இதில் 25% என்பது ரூ. 2.50 ஆகும். MPCM COUNTER CLERK கிற்கு ரூ. 2.00 ம் SUPERVISORக்கு ரூ. 0.50 ம் INCENTIVE ஆகப் பெறமுடியும். இதனை படித்த பிறகாவது உடன் பில் போட அனைத்து கோட்டங்களிலும் அறிவுறுத்தவும்.
5. மயிலாடுதுறை கோட்டம் திருவிடைக்கழி அஞ்சலகத்தில் பணியாற்றி, பணி நீக்கம் செய்யப் பட்டு , நீதி மன்ற வழக்கின் காரணமாக நிலுவையில் இருந்து தற்போது இறந்து போன GDS ஊழியர் தோழர் . ராஜேந்திரனின் வாரிசுக்கு GDS பணி அளிக்க வேண்டினோம். தற்போது அதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது . அவருக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் நிச்சயம் பெற்றுத் தர மாநிலச் சங்கம் உறுதியளித்துள்ளது .
6. 2011 மற்றும் 2012 க்கான எழுத்தருக்கான அனைத்து காலியிடங்களுக்கும்
தேர்வு நடத்திட எதிர்வரும் JULY மாதத்திற்குள் NOTIFICATION செய்யப் படும் என்று மாநில அஞ்சல் நிர்வாகம் உறுதியளித்துள்ளது . தற்போது 21.05.2012 பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்டபடி 17% இல் 10% ஏற்கனவே உள்ளது தவிர மீதமுள்ள 7% LR PA க்கான RECTT .என்பது SPECIAL
RECTT ஆக நடத்திட வேண்டும் என்று மாநில நிர்வாகத்திடம் கோரியுள்ளோம். மேலும் கடந்த 2011 மற்றும் 2012 க்கான LSG பட்டியல் வெளியிட நீண்ட கால தாமதம் செய்யப் படுவதால் , அதற்க்கான RESULTALT
P.A. VACANCY யையும் இந்த SPECIAL RECTT. இல் சேர்க்க வேண்டும் என்று
மாநில அஞ்சல் நிர்வாகத்திடம் நாம் கோரியுள்ளோம். இது குறித்து நமது பொதுச் செயலரின் கவனத்துக்கும் நாம் கொண்டு செல்ல உள்ளோம்.
7. தேங்கியுள்ள COMPASSIONATE APPOINTMENT பட்டியல் எதிர் வரும் வாரத்தில் கண்டிப் பாக வெளியிடப் படும் என்று மாநில அஞ்சல் நிர்வாகம்
உறுதியளித்துள்ளது.
8. 1.1.2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்து பிறகு இறந்து போன ஊழியர்களின் வாரிசுக்கு FAMILY PENSION அளிக்காமல் நீண்ட காலமாக தமிழகத்தில் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இது தவறு என்று சுட்டிக் காட்டி நம் மாநிலச் சங்கத்தின் மூலம் உரிய DOPT உத்திரவுடன் CPMG அவர்களுக்கு நாம் புகார் அளித்திருக்கிறோம். நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்க உடன் ஆவன செய்யப் படும். அப்படி யாரேனும் ஊழியர் வாரிசு பாதிக்கப் படிருந்தால் உடன் கோட்ட/கிளைச் செயலர்கள் மாநிலச் செயலரை அணுகவும்.