Thursday, May 17, 2012

மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி !



சென்னை மத்திய கோட்டத்தில் 'CONTRIBUTORY NEGLIGENCE'  அடிப்படையில்  நிறுத்தப் பட்ட DA ARREARS  மற்றும் INCREMENT ARREARS  தொகை  மீண்டும்  அவர்களுக்கு  திருப்பி அளிக்க வேண்டும் என்று நம் அஞ்சல் மூன்று  மாநிலச்  சங்கத்தின் சார்பில் PMG, CCR அவர்களிடம் கடந்த  24.04.2012  அன்று கடிதம்  அளித்து பேசியிருந்தோம்.  கடிதத்தின் நகல்  நமது  வலைத்தளத்திலும்  பிரசுரிக் கப் பட்டிருந்தது  உங்களுக்கு தெரியும்.

தற்போது இதன் மீது PMG CCR அவர்கள் , உடனடியாக பிடிக்கப் பட்ட  தொகைகளை  வழங்கிட உத்திரவு இட்டுள்ளார்  என்று APMG STAFF  அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்துள்ளார். பிரச்சினையின்  தன்மையை  சரியாகப்  புரிந்து கொண்டு  உத்திரவு நல்கிய PMG, CCR  அவர்களுக்கும்  APMG (STAFF) CCR அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின்  நன்றி !