நம் மாநிலச் சங்கம் RJCM MEETING இல் பல்வேறு தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை எடுத்துள்ளதை ஏற்கனவே இந்த வலை தளத்தில் பிரசுரித்து இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணு கிறோம். இல்லையானால் OLDER POST பகுதிக்கு சென்று CLICK செய்து பார்க்கவும்.
RJCM கூட்டம் தற்போது எதிர்வரும் 15.06.2012 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டு அதன் மீது வேகமாக வேலைகள் நடை பெற்று வருகின்றன . நம்முடைய சார்பில் மட்டும் 59 பிரச்சினைகள் வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றில் முடிவெடுக்கப் பட்டு உத்திரவுகள் இடப்படுவதாக சம்பந்தப் பட்ட APMG மற்றும் AD க்கள் மூலம் நமது மாநிலச் செயலரிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் சில :-
****************************************************************************
1. CONFIRMATION EXAM ரத்து செய்யப் பட்டதால் , ஏற்கனவே CONFIRMATION EXAM PASS செய்யாத ஊழியர்கள் 48 பேருக்கு நிறுத்தப் பட்டிருந்த INCREMENT கள் மற்றும் PAY COMMISSION ARREARS தொகை நிலுவையுடன் ,உடன் வழங்க உத்திரவு சம்மந்தப் பட்ட PMG க்களுக்கு அளிக்கப் படும்.
2. தேங்கிக் கிடக்கும் RULE 38 இட மாறுதல்களில் SPOUSE CATEGORY க்கும்
MUTUAL TRANSFER க்கும் முன்னுரிமை அளித்து இடமாறுதல் விண்ணப் பங்கள் உடன் பரிசீலிக்கப் படும் .
3. நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் GDS ஊழியரின் GROUP INSURANCE தொகை MTS/POSTMAN ஆக பதவி உயர்வு பெற்ற / பணி ஒய்வு பெற்ற தோழர்களுக்கு உடன் வழங்கிட உத்திரவிடப் படும்.
4. நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஸ்ரீரங்கம் கோட்டத்தின் மண்ணச்ச நல்லூர் , பிச்சண்டார்கோயில் பகுதி உயர் வீட்டு வாடகைப் படி உத்திரவு வழங்கப் பட்டது .
5. நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த WELFARE FUND உதவித் தொகை
குன்னூர் தோழர். பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் திருத் துறைபூண்டி
தோழர் இஸ்மாயில் அவர்களுக்கும் வழங்கப் பட்டது .
6. R.O./C.O. வுக்கு DEPUTATION இல் சென்ற ஊழியர்கள் திருப்பப் படுவர் .
அதேபோல சென்னை GPO விலிருந்து தென் சென்னை கோட்டத்திற்கு
DEPUTATION இல் அனுப்பப் பட்ட ஊழியர்கள் படிப் படியாக திருப்பப் படுபவார்கள். தற்போது இரண்டு பேருக்கு உத்திரவு இடப் பட்டுள்ளது.
************************************************************
இதே போல CPMG, மற்றும் PMG CCR அவர்களிடம் எடுக்கப் பட்டு தீர்க்கப்
பட்ட பிரச்சினைகள் சில :-
1. வேலூர் கோட்ட சுழல் மாறுதல் உத்திரவில் எடுக்கப் பட்ட மூன்று
இடமாறுதல் உத்திரவுகளும் மாற்றி அமைக்கப் பட்டு ஊழியர் விரும்பிய
வண்ணம் இடமாறுதல் பெற்றுத் தரப் பட்டது.
2. ஒன்றரை ஆண்டுகளாக தேர்வு பெற்றும் பணி நியமனம் ஆகாமல்
இருந்த குடந்தை கோட்ட எழுத்தர் தோழர் . சதீஷ்குமார் பிரச்சினை CPMG அவர்களிடம் எடுத்துச் செல்லப் பட்டு பணி நியமன ஆணை பெறப்பட்டு பணியில் இணைந்தார்.
3. நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த திருவண்ணாமலை கோட்டத் தோழியர் கல்பனா அவர்களின் MACP பிரச்சினை CPMG அவர்களிடம் எடுத்துச் செல்லப் பட்டு பிரச்சினை தீர்க்கப் பட்டு தற்போது உத்திரவு இடப்பட்டுள்ளது .
4. மதுரை மண்டலத்தில் , திருநெல்வேலி கோட்ட சுழல் மாறுதல் உத்திரவில் , அளிக்கப் பட்ட நான்கு பிரச்சினைகளில் இரண்டு பேருக்கு
உத்திரவு அவர்கள் விரும்பிய படியே மாற்றி அமைக்கப் பட்டது .
மீதி இரண்டு பேரின் பிரச்சினைகளும் தொடர்ந்து தீர்க்க முயற்சி எடுக்கப் படும்.
5. நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த செங்கோட்டை HSG II கட்டிட பழுது பார்க்கும் பிரச்சினை BI-MONTHLY MEETING இல் எடுக்கப் பட்டு தற்போது
CIVIL WORK மற்றும் ELECTRICAL WORK செய்யப் பட்டு , COUNTER AREA
புதிது படுத்தப் பட்டு , புதிய FURNITURE கள் அளிக்கப் பட்டுள்ளன .
பிரச்சினை தீர்க் கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தென்காசி கிளைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார் .
*****************************************************************************