39 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் ! ..........
நமது காலத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு !.................
கடைசியாக 1973 இல் நடைபெற்ற அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு இணைந்த மத்திய செயற்குழு கூட்டம் சென்னை வடகோட்டத்தில் ..... அதற்குப் பின் இதுவேநிகழ்வு !
நமது அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS அவர்கள் பொறுப்பில் நடைபெற்ற கடைசி செயற்குழு .............
புதிய பொதுச் செயலர் தோழர். சிவநாராயணா அவர்களைப் பெற்ற செயற்குழு..............
இது நடைபெற்ற வேலூருக்கும் ஒரு சிறப்பு உண்டு.........
நமது அன்புக்குரிய KVS அவர்கள் முதன் முதலில் மாநிலச் செயலர் ஆனவுடன் , முதல் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடத்தப் பட்டது வேலூர் கோட்டத்தில் ...
நமது அன்புக்குரிய KVS அவர்கள் பொதுச் செயலராக இருந்து இலாக்கா பணி நிறைவடையும்
போது அவர் காலத்தில் கடைசியாக
நடை பெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டமும் வேலூர் கோட்டத்தில் ....
வேலூர் கோட்ட 'வீரர்' களுக்கு மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள் .... வாழ்த்துக்கள் ........
...................
...................
மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 23 மற்றும் 24.6.2012 தேதிகளில் வேலூரில் உள்ள S.K.M. மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவர் தோழர். M. கிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்க , சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தோழர் . B.G. தமன்கர் அவர்கள் பொது அரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார்.
சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலரும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவரும் ஆகிய தோழர். K.R., நமது பொதுச் செயலர் தோழர் . K.V.S., AIPAEA பொதுச் செயலர் தோழர். சத்தியநாராயணா, AIPAOEU பொதுச் செயலர் தோழர் . பிரணாப் பட்டாசார்யா , R IV பொதுச் செயலர் தோழர். சுரேஷ், AIPSBCOEA பொதுச் செயலர் தோழர். அப்பன்ராஜ், NFPE துணைப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி , AIPEU GDS NFPE பொதுச் செயலர் தோழர் பாண்டுரங்க ராவ், AIPCPCCWF WORKING PRESIDENT தோழர்.
நாகபூஷணம் , P IV AGS தோழர். கோபு . கோவிந்தராஜன், R III AGS தோழர். M.B. சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றி னார்கள்.
செயற்குழுவில் அனைத்து மாநிலச் செயலர்களும், அகில இந்திய சங்க நிர்வாகிகளும், அகில இந்திய மகிளா கமிட்டியின் நிர்வாகிகள் தோழியர். நந்தா சென்(W.B.), மௌசுமி மஜும்தார் (Assam) , புஷ்பேஸ்வரிதேவி (A.P.) மணிமேகலை (T.N.) ஆகியோரும் கலந்துகொண்டு ஊழியர் பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய சங்கத்தின் செயல் பாடுகள் குறித்தும், போராட்டங்களில் பங்குகொள்ள வேண்டிய அவசியம் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆழமாக விவாதித்தனர் .
தோழர். K.V.S. அவர்களுக்கு வேலூர், பெண் கொடுத்த ஊர் என்பதால் அவருக்கு , அவரது பணி நிறைவை ஒட்டி மாப்பிள்ளைக் கான மரியாதை செய்வது போல , 25 க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளை தட்டுகளில் ஏந்தி தோழியர்களும் தோழர்களும் , திருமண வீடு போல , ஆளுயர மாலை அணிவித்து , மலர் கிரீடம் அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்வு புதுமையானதாகவும் , சிறப்பானதாகவும் , வேலூர் கோட்ட தோழர்கள்/தோழியர்களின் அன்பை வெளிப் படுத்துவதாகவும் அமைந்தது வெகு சிறப்பு.
மத்திய செயற்குழு ஏகமனதாக துணைப் பொதுச் செயலர் தோழர். சிவநாரயணா அவர்களை அடுத்து அகில இந்திய மாநாடு வரை OFFICIATING GENERAL SECRETARY ஆக பணி யாற்ற முடிவெடுத்தது. மேலும் தோழர். KVS அவர்களை அடுத்த மாநாடு வரை தலைமையகத்தில் பணியாற்ற கேட்டுக் கொண்டது .
சம்மேளனத்தால் அங்கீகரிக்கப் பட்ட AIPEU GDS NFPE சங்கத் திற்கு அனைத்து உறுப்பு சங்கங்களின் ஆதரவை எல்லா விதங்களிலும் அளித்திட வேண்டியும், அஞ்சல் மூன்றின் முழு ஆதரவை அளிப்பதாகவும் தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப் பட்டது.
ஏனெனில் AIPEU GDS NFPE சங்கம் மட்டுமே NFPE இன் உறுப்பு சங்கமாக , அதாவது "ASSOCIATE MEMBER" ஆக இருக்க விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தை சம்மேளனத்திடம் அளித்துள்ளதாக நமது மா பொதுச் செயலர் தெரிவித்தார்.
AIPEDEU சங்கம் NFPE இன் உறுப்பு சங்கமாக இருக்க மனுச் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. AIPEDEU சங்கம் NFPE யின் ASSOCIATE MEMBER ஆக இருந்திட ஏற்கனவே நாம் அளித்த அழைப்பை நிராகரித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
CWC கூட்டம் புதிய பொறுப்பு பொதுச் செயலர் தோழர். சிவநாராயணா அவர்கள் நன்றி கூற இனிதே முடிவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனிதே செய்து முடித்த வரவேற்புக் குழு தோழர்கள் ..................
AIPEDEU சங்கம் NFPE இன் உறுப்பு சங்கமாக இருக்க மனுச் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. AIPEDEU சங்கம் NFPE யின் ASSOCIATE MEMBER ஆக இருந்திட ஏற்கனவே நாம் அளித்த அழைப்பை நிராகரித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
CWC கூட்டம் புதிய பொறுப்பு பொதுச் செயலர் தோழர். சிவநாராயணா அவர்கள் நன்றி கூற இனிதே முடிவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனிதே செய்து முடித்த வரவேற்புக் குழு தோழர்கள் ..................