Thursday, June 14, 2012

CONFEDERATION CAMPAIGN MEETING ON 15.06.2012 AT ANNA ROAD HPO

அன்புத் தோழர்களே ! வணக்கம் !
 
எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய அனைத்து மத்திய / மாநில/பொதுத் துறை  ஊழியர்களின் பேரணி மற்றும் வேலை நிறுத்த போராட்டங்கள்  குறித்த பிரச்சாரக் கூட்டங்கள்  கடந்த 12.06.2012 முதல்  திருச்சி , மதுரை , கோவை போன்ற நகரங்களில்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .
 
அதன் தொடர்ச்சியாக 15.06.2012 அன்று மாலை  06.00 மணியளவில் சென்னை அண்ணா சாலை CPMG  அலுவலக மாடியில்  உள்ள 4வது தளத்தில் உள்ள அரங்கில் இந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது.
 
கூட்டத்தில்  நமது பொதுச் செயலர் தோழர் KVS,  சம்மேளன முன்னாள் மா பொதுச் செயலர்  தோழர் K.R.,  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் தோழர் . துரைபாண்டியன்  உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிட உள்ளார்கள் .
 
எனவே சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் , பெருவாரியான உறுப்பினர் களுடன் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு
மாநிலச்  சங்கத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.