Friday, September 28, 2012

INFRINGEMENT OF PERSONAL LIBERTY OF THE POSTAL STAFF

தென் மண்டல இயக்குனர்  திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின்  தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு ! 

 ஊழியர்கள்  தங்களது EB BILL  ஐ அந்தந்த மாதம் அவர்கள் பணி  புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் ! இல்லையென்றால்  ' IT WILL BE VIEWED SERIOUSLY'  என்றும்  அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தனது அதிகார வரம்பை மீறிய உத்திரவு ! 

இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால் , நாளை  ஒவ்வொரு ஊழியரும்  தனது  ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை  அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம்   வாங்க வேண்டும்  . இல்லையென்றால்   உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !. 

பிரிதொரு நாள் ,  அஞ்சலகத்தில்   எல்லோரும் ' CHOTTU KOOL'  கட்டாயம் வாங்க வேண்டும் என்பார் ! இல்லையென்றால் தண்டனை என்பார் !

மற்றொரு நாள்  வேறு ஏதேனும்  'டுபாக்கூர் '  பொருளை  ஏஜென்சியில் எடுத்து  அதனையும் வாங்க வேண்டும் என்பார்.  இதற்கெல்லாம்  உன் சம்பளத்தில் ஏற்கனவே  ECS  இல் பிடித்தாயிற்று . உனக்கு இந்த மாதம் சம்பளமில்லை என்பார் . இவையெல்லாம் சரியா ?

எதை வாங்க வேண்டும் . எதை வாங்க வேண்டாம் . எங்கு கட்ட வேண்டும் . எங்கு கட்ட வேண்டாம் . என்றெல்லாம் தீர்மானிக்க தனி மனிதனுக்கு முழு உரிமை உள்ளது !  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாகக் கூறுகிறது . அவரவர்களுக்கு உணர்வும் உள்ளது. இலாக்கா மீது பற்றும் உள்ளது. அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள். 

இலாக்கா நடத்தை விதிகளிலோ ,   இலாக்கா  சேவை விதிகளிலோ,  பணி  நியமன விதிகளிலோ , அடிப்படை விதிகளிலோ  இதுவெல்லாம் செய்ய வேண்டும் என்றோ, இல்லை எனில் தண்டனை  என்றோ எங்கும் இல்லை. 

இந்த விதிகளையெல்லாம் மீறி , தானே புதிதாக  விதி வகுக்க  இந்த அதிகாரிக்கு அதிகாரம் யார் தந்தது ? அரசாங்கமா ?  இலாக்காவா ? அல்ல ! அல்ல !

இவருக்கு முன்னோடியாக  அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் , மதுரை அவர்கள் , கழிப்பறை கழுவ வில்லை என்றால் தண்டனை கொடுப்பேன் என்று  வெட்ட வெளிச்சமாக , பட்டவர்த்தனமாக  பல ஊழியருக்கு எழுத்து மூலம்  உத்திரவு கொடுத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ! நாமும் பிரசுரித்துள்ளோம் !

இதன் தாக்கமே  இது !  இது சரியா என்று  உயர் அதிகாரிக்கு NFPE-FNPO  அஞ்சல் மூன்று சங்கங்களின் சார்பாக  கூட்டுக் கடிதம் அளித்துள்ளோம் ! சரி செய்யப்படும் என்று எண்ணுகிறோம் ! கடிதத்தின் நகலை  கீழே பார்க்க ! அனைத்து ஊழியருக்கும் இதனை  தெரிவிக்க !