Friday, September 21, 2012

JCA HUNGER FAST AGAINST THE ATROCITIES OF DIRECTOR, PTC, MADURAI

JCA
NFPE-FNPO  அஞ்சல் -RMS-MMS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு தமிழ் மாநிலம். 
____________________________________________________________________

ஊழியர்களை கொடுமைப்படுத்தி   மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தை அடிமைக் கொட்டடியாக வைத்திருக்கும் DIRECTOR, PTC, MADURAI யின் அடாவடித்தனத்தை எதிர்த்தும் , 


அவரது கொடுஞ்செயலினால் மனமுடைந்து 

தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும்  தோழர்.ஜெயக்குமார், எழுத்தர்,  பெரம்பூர்-சென்னை அவர்களின் சாவுக்கு உயர்மட்ட காவல்துறை விசராணை நடத்திடக் கோரியும் ,  


அஞ்சல் பயிற்சி மையத்தில் தற்போது  பயிற்சியில் உள்ள அனைத்து பயிலாளர்களிடமும்  நேரடி விசாரணை நடத்திட வேண்டியும் , 

விசாரணை நியாயமாகவும் , பாரபட்சமின்றி நடைபெறவேண்டி , விசாரணை முடியும் வரையில் PTC, DIRECTOR  ஐ  தற்காலிகப் பணிநீக்கம் செய்திட வேண்டியும்  


தமிழகத்தில் உள்ள NFPE - FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் சங்கங்களும் ஒன்று சேர்ந்து  நேற்று (20.09.2012 அன்று) CPMG  அலுவலகம் முன்பாக  மதியம் உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டம்  நடத்தினோம். . பின்னர் CPMG அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து  இயக்குனரிடம்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .

கண்டன ஆர்ப்பாட்டத்தில்  NFPE-FNPO சம்மேளனங்களின் அனைத்து உறுப்புச் சங்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 300  க்கு மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டது , ஊழியர்களின் ஒட்டுமொத்த கோபத்தை வெளிப்படுத்துவதாக  இருந்தது. 

அதன் தொடர்ச்சியாக , இதே கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகத்தில் உள்ள NFPE- FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்களும் JCA  சார்பில் CHIEF PMG அலுவலகம் முன்பாக  இன்று காலை 10.00 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். 

ஆகவே சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள அனைத்துபகுதி  NFPE-FNPO சம்மேளனங்களின்  தோழர்களும்  மிகப் பெரும் அளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு அநீதி களைய உங்கள் 
பங்கினை செலுத்திட வேண்டுகிறோம்.

இந்தப் போராட்டத்தின் வீச்சு  அனைத்து கொடுமதியாளர்களுக்கும்  ஒரு பாடமாக  அமைந்திட வேண்டும். இறந்து போன அப்பாவி ஊழியரின் ஆன்மாவுக்கு  இதுவே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் .

போராடுவோம் !            நீதி கேட்டு வீதியில் நின்று  போராடுவோம் !

  அநீதி களையப்படும் வரை போராட்டம் தொடரட்டும் !
________________________________________________________________________________
குறிப்பு : 

இதற்கு முன்னர் இந்த PTC, DIRECTOR  இன் அடாவடியான  கொடுஞ்செயல்களினால்  பாதிக்கப்பட்ட தோழர்கள்  , இலாக்கா விதிமுறை மீறிய செயல்கள்,  மனித உரிமை மீறிய செயல்கள் , அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனே  புகாராக எழுதி CHIEF PMG   அவர்களுக்கு அனுப்புமாறும் , அதன் நகலை தவறுதல் இன்றி  மாநிலச் செயலருக்கு அனுப்புமாறும் பணிவுடன்  கேட்டுக் கொள்கிறோம்.  அப்படிச் செய்வதால் , இந்த பிரச்சினையில் நீதி கிடைத்திட , மேலும் பலம் சேர்க்கும் !  தயவு செய்து கோட்ட /கிளைச் செயலர்கள் இந்த திசையில் உடன் கவனம் செலுத்தவும்    கோரப்படுகிறது. அவசியம்  எதிர்பார்க்கிறோம்.

இதர மண்டலங்களில்  ஆங்காங்கே  தல மட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி  உணவு இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் கோட்ட/ கிளைச் செயலர்களைக் கோருகிறோம். அவசியம்  தொலைக் காட்சி/ பத்திரிக்கை நிருபர்களை அழைத்து  அவர்கள் முன்னிலையில் இந்தப் போராட்டத்தை நடத்தவும்.

அடுத்த கட்ட  போராட்டத்திற்கும் தயாராவோம் !
_________________________________________________________________________________