கோட்ட/ கிளைச் செயலர்களே !
இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , அதே நேரத்தில் நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு நடைபெற உள்ள 11.10.2012 JCA வின் வேலை நிறுத்தத்தினை அனைத்து பகுதி தோழர்களின் முழு ஒத்துழைப்பை பெற்று வெற்றிகரமாக நடத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மறந்து விடாதீர்கள் !
இது போன்ற கொடுமைகள் இனி எங்கும் நடைபெறக் கூடாதென்றால் , அப்படி நீங்கள் விரும்பினால் , இந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்தி வேலை நிறுத்தத்தினை நூற்றுக்கு நூறு சதம் வெற்றிகரமாக ஆக்கவேண்டுவதே உங்கள் முன் உள்ள தலையாய கடமை ஆகும்.
எப்போதும் போல , பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கடைசி நாள் வரை அலட்சியம் காட்டினால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியாது . உங்களைக் காப்பாற்ற உங்கள் பலம் தான் முக்கியம் . உங்கள் செயல் தான் முக்கியம் .இன்றிலிருந்தே உடன் பணி தொடங்குங்கள் !
நம் தன் மானம் காக்கப் பட, சுயமரியாதை மீட்கப் பட, ஊழியர்களை அடிமைகளாக நடத்தும் காட்டுமிராண்டி அதிகார வர்க்கத்தில் இருந்து மீண்டு புத்துயிர் பெற இதுவே நேரம் ! நம் போராட்டம் ...... உழைக்கும் வர்க்கத்தின் மானம் காக்கும் போராட்டம் ஆகும் !
4.10.2012 மாலை திருச்சி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்
5.10.2012 மாலை மதுரை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்
6.10.2012 மாலை கோவை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்
10.10.2012 அன்று மாலை CPMG அலுவலக வாயிலில் நடைபெறும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்திற்கும்
முழு ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள NFPE - FNPO உறுப்புச் சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்கள்/மாநிலச் சங்க நிர்வாகிகள் /மண்டலச் செயலர்கள் கூட்டுப் பொறுப்பாக JCA அமைத்து செய்திடக் கோருகிறோம் .
அந்தந்த மண்டலங்களில் உள்ள கோட்டங்களில் இருந்து பெருவாரியான அளவில் ஊழியர்களைக் கலந்து கொள்ளச் செய்வது அந்தந்த கோட்ட/ கிளைச் செயலர்களின் பொறுப்பு ஆகும் . அந்த நாளில் விடுப்பு எடுத்து அதற்கான தீவிர முயற்சியை செய்திட வேண்டுகிறோம். இன்று இல்லையேல் என்றும் இல்லை !
வெற்றி நமதே ! வெற்றி நமதே ! என்று போர்ப்பரணி பாடி வாருங்கள் !
இதற்கான நோட்டீஸ் ஒவ்வொரு கோட்ட/கிளைச் செயலருக்கும் இன்று அனுப்பப் பட்டுள்ளது ! அதன் நகல் கீழே பார்க்கவும்.