தமிழகம் தழுவிய அளவில் அனைத்துக் கோட்ட /கிளைகளிலும் 
 கண்டன ஆர்பாட்டம் 
சேலம் மேற்கு கோட்டக்   கண்காணிப்பாளரின் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க  விரோதப்  போக்கைக்  கண்டித்தும், 
 ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில்    எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை   ரத்து செய்திடக் கோரியும், 
போலி ரசீது  தயாரித்துக் கொடுத்து முறைகேடாக பெற்ற பணம் 
ரூ 1,40,000.00 –த்தை உடனடியாக அவரிடமிருந்து பிடித்தம் செய்யவும், 
அவர் மீது  ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கக்கோரியும், 
தொழிற்சங்கம்  அளித்த  புகார்கள் மீது இதுவரை எவ்வித  நடவடிக்கையும் எடுக்காத  நிர்வாகத்தை  கண்டித்தும், 
தமிழ்  மாநிலச்  சங்க அறைகூவலை  ஏற்று  தமிழகம்  தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 
_____________________________________________
சென்னை பெருநகரத்தில் உள்ள கோட்டங்களை ஒன்று திரட்டி 
CPMG  அலுவலக வாயிலில் 
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 
_______________________________________________
நாள்:  16.07.2012 திங்கள்         மதியம்  1.00 மணி    இடம்: CPMG அலுவலகம் முன்பு
விளக்கவுரை:   தோழர்  J. ஸ்ரீவெங்கடேஷ்   மாநிலத் தலைவர் 
தோழர்   J. ராமமூர்த்தி   மாநிலச் செயலர்
தோழர்  A. வீரமணி   மாநில நிதிச் செயலர் / உதவி   பொதுச் செயலர் 
கடிவாளம்  இல்லாத  குதிரையாய் தறிகெட்டு  ஓடும்  இதுபோன்ற ஊழல் அதிகாரிகளுக்கு  எச்சரிக்கை மணியடிக்க, அவர்தம் கொட்டத்தை அடக்க, துறையின் நட்டத்தை தவிர்க்க அனைவரும் வீறுகொண்டெழுந்து அலை  கடலென ஆர்ப்பரித்து  ஆர்பாட்டத்தில்  தவறாது கலந்துகொண்டு நீதியை 
நிலைநாட்ட வாரீர்! வாரீர்!!
______________________________________________________________________
குறிப்பு : குறிப்பு : குறிப்பு : குறிப்பு 
அனைத்துக் கோட்ட/கிளைச் செயலர்களும் தவறாமல் தங்கள் போட்ட ஆர்ப்பாட்ட சுற்றறிக்கையின்  நகல்  மற்றும்  கடிதத் தந்தியினை 
PMG, WESTERN REGION மற்றும்  CHIEF PMG, ஆகியோருக்கு அவர்கள் பெயரில்  கண்டிப்பாக  அனுப்பி வைக்கவும் . 
அதன் நகலை மாநிலச் செயலருக்கு அனுப்பவும்.
அப்போதுதான் இந்தப் போராட்டத்தின் வீச்சு தமிழகம் முழுவதும் 
உள்ளதாத நிர்வாகத்திற்கு தெரிய வரும் . 
எதிர்காலத்தில்  ஊழியர் விரோத/ஊழல் அதிகாரிகளைக் 
கண்டித்து நடைபெறும் எந்தப் போராட்டத்திற்கும்  இது ஒரு 
முன்னோட்டமாக இருக்க வேண்டும் . எப்போதும் போல , 
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள் ! அப்படி 
இருந்தால் அது நமது  ஒற்றுமைக்குக் கேடு !
ஆர்ப்பாட்ட சுற்றறிக்கை மற்றும் கடிதத் தந்தி அனுப்பியவர்களின் 
விபரம் மாநிலச் சங்க வலைத்தளத்தில் பிரசுரிக்கப் படும்.
________________________________________________________________________
