"தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரை  மேய்வதா ?
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல்  பார்த்து நிற்பதா ?"
 சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின் போலியான  
ஊழல்  LODGE BILL  மற்றும் உணவு பில்  போட்டு லட்சக் கணக்கில் 
பணம் பெற்றது குறித்து நாம் ஏற்கனவே  மாநில/ மண்டல 
அதிகாரிகளுக்கு  உரிய ஆவணங்களுடன் புகார் அனுப்பியிருந்தோம் ! அவர்களும்  மண்டலத்திலிருந்து ஒரு TEAM  தனியேயும் 
 மாநில அலுவலகத்திலிருந்து  ஒரு  TEAM  தனியேயும்  விசாரித்து  
அறிக்கை அளிக்க அனுப்பியிருந்தார்கள் . 
அந்த விசாரணை அதிகாரிகளை திசை திருப்ப  நம்முடைய
கோட்டக் கண்காணிப்பாளர் அவர்கள் LODGE லும்  உணவு விடுதியிலும் 
 தான் தங்கி இருந்ததாகவும்  உணவு சாப்பிட்டதாகவும் 
பொய் சாட்சி தயார் செய்து அவர்களை ஏமாற்றியதாக நமக்கு 
தகவல் வந்தது ! ஆகவே  'உரிய இடத்தில்" இது குறித்து நாம் 
புகார் செய்தோம்  !  அந்த 'உரியவர்கள்'  செய்த 
விசாரணையில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் சிக்கின !
உதராணத்திற்கு  சில மாதிரிகள் இதோ !
OCTOBER 2011 மற்றும் NOVEMBER 2011 மாதங்களுக்கு  அவர்  போலி பில் கொடுத்து பெற்ற  LODGE BILL கள்  முறையே  ரூ. 23250/- மற்றும் ரூ.21000/-
அவர் தங்கியதாக காட்டிய தேதிகள் விபரம் கீழே !
| 
October 2011 | 
25187.50 | 
1.10.2011 to 
31.10.2011 | 
23250/- | 
5890/- | 
| 
November 2011 | 
22854 | 
1.11.11 to24.11.11 &26.11.11 to
  29.11.11 | 
21000/- | 
5320/- | 
எந்த LODGE  இல் தங்கியதாக  பொய் சாட்சி தயாரித்தாரோ  , 
அந்த  LODGE இன்  REGISTER இல்  திருவாளர் . சுந்தரராஜன் அவர்கள் 
பெயரோ அல்லது அவரது கையெழுத்தோ  சுத்தமாக இல்லவே 
இல்லை என்பதுதான்  'உரிய விசாரணை அதிகாரிகளுக்கு " 
கிடைத்த ஆவணம்  ஆகும். அவர்கள்  " மேலே " உள்ளவர்கள் ! 
அவர்களை ஏமாற்ற முடியாது !
இந்த விசாரணை அதிகாரிகளை ஏமாற்றலாம் ! 'அந்த விசாரணை அதிகாரிகளை' ஏமாற்றவே முடியாது  !
இங்கே தப்பினாலும் அங்கே தப்பவே முடியாது  !
பார்க்க மாதிரிக்கு சில தேதிகள் :-
     இது ஒரு தொடர் கதை !                          தினம் தினம்  புதுக் கதை !
இன்னும் நிறைய இருக்கு !

