Tuesday, July 17, 2012

PHOTOS OF STATEWIDE DEMONSTRATION HELD ON 16.07.2012

சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளர் திரு. சுந்தரராஜனின் ஊழியர் விரோத , ஊழல்  போக்கைக்  கண்டித்து , அவர் ,மீது இலாக்கா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் , ஊழியர்கள் மீது எடுக்கப் பட்ட பழி வாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திடக் கோரியும்   16.07.2012 அன்று  மாநிலம் தழுவிய அளவில்  அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  கண்டன ஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சென்னை CPMG  அலுவலக வாயிலில் , சென்னை பெருநகர கோட்ட சங்கங்களை ஒன்று திரட்டி , மாநிலச் சங்கத்தின் சார்பில்  மாபெரும்  உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநிலத் தலைவர்   தோழர். J.  ஸ்ரீ வெங்கடேஷ்  தலைமை வகித்தார் .மாநிலச் செயலர் தோழர் J.R. ஆர்பாட்டத்தின்  நோக்கம் குறித்தும், பிரச்சினை  தீர்க்கப் படவில்லையானால், அடுத்த கட்டப் போராட்டம்  தொடரும் என்றும் , இது மேலும் விரிவு படுத்தப் படும் என்றும்   விளக்கிப் பேசினார்.  

கூட்டத்தில்  சம்மேளன  உதவிப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி , அகில இந்தியசங்கத்தின்  செயல் தலைவர்  தோழர். N.G. , அகில இந்திய சங்கத்தின் உதவிப் பொதுச் செயலர்  தோழர் .A. வீரமணி ,  P4 சங்கத்தின்  அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். கோபு . கோவிந்தராஜன் , R3  சங்கத்தின்  மாநிலச் செயலரும்  NFPE  தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழுவின்  கன்வீனருமான தோழர். M.கண்ணையன் , R 4  மாநிலச் செயலர் தோழர்.K. ராஜேந்திரன் , NFPE SBCO  சங்கத்தின் பொதுச் செயலரும் மாநிலச் செயலருமான தோழர். அப்பன் ராஜ், நிர்வாகப் பிரிவு சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர் .ரகுபதி உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் , பல்வேறு அதிகாரிகளின் அத்து மீறிய  ஆணவச் செயல்கள் குறித்தும், இது தொடர்பாக அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து  மாநில அளவில்  ஒன்று பட்ட ஒரு போராட்டம் நடத்திட வென்றும் என்றும்  பேசினார்கள். 

இறுதியாக மாநில உதவித் தலைவர் தோழர். வெங்கட்ராமன் அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம்   சிறப்பாக முடிவுற்றது.  ஆர்ப்பாட்டக் கூட்டத்தில்  சென்னை  பெருநகரத்தில் உள்ள பெரும்பான்மையான  கோட்ட/கிளைச் செயலர்களும் , இதர பொறுப்பாளர்களும்  மற்றும் 150 க்கும் மேற்பட்ட தோழர்களும் , தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் , ஆதரவு நல்கிய அனைத்து மாநிலச் சங்கங்களுக்கும் , அது போல மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில் , இந்த அறைகூவலை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து கோட்ட/கிளைச் சங்கத்தின்  பொறுப்பாளர்களுக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. 

கோட்ட/கிளைச் செயலர்கள் அனைவரும் தவறுதல் இன்றி ,  நமது சுற்றறிக்கை எண்  9 இல்  காட்டிய  SAVINGRAM  வாசகத்தை  அவரவர்  LETTER HEAD இல்  டைப்  செய்தோ அல்லது  வெள்ளைத்தாளில் டைப்  செய்தோ , கோட்ட/கிளைச் செயலருக்கான  ரப்பர் ஸ்டாம்ப்  IMPRESS  செய்து  கையெழுத்திட்டு  கீழ்க் கண்ட முகவரிக்கு  அவர்களின்  நோட்டீஸ் நகலுடன்  அனுப்புமாறு  கேட்டுக் கொள்கிறோம். 

1. SRI. A.N. NANDA, IPS, PMG, WESTERN REGION, COIMBATORE 641 002 
2. SMT. SHANTHI NAIR, IPS, CHIEF PMG, TN CIRCLE , CHENNAI -600 002.
3. COM. J. RAMAMURTHY, CIRCLE SEC., AIPEU GRC , TN ,TIRUVALLIKENI 
    S.O. CHENNAI 600 005.

இந்த ரிப்போர்ட் ஐ   கண்டிப்பாக  இரண்டு நாட்களில் வந்து  சேருமாறு 
அனுப்பிட வேண்டுகிறோம். இதுவரை இந்தப் பிரச்சினை தீர்க்கப் படவில்லை .

அடுத்த கட்ட போராட்டத்தில்  நமது  பொதுச் செயலர் தோழர். KVS  அவர்களும் கலந்துகொள்வதாக தொலைபேசியில் தெரிவித்தார். எனவே அதற்கான தேதியை ,  அவரது  PROGRAMME க்கு ஏற்ப  தெரிவிப்பதாகவும் , எனவே உடன் தேதியை அறிவிக்க வேண்டாம் என்றும்  கேட்டுக் கொண்டதால் , உடன் தேதி அறிவிக்கப் படவில்லை. 

இதுவரை வந்த புகைப்படங்களை கீழே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.

CHIEF PMG  அலுவலக வாயிலில் :-





சேலம்  மேற்கு கோட்டத்தில் :-

 





திண்டுக்கல் கோட்டத்தில் :-



அரக்கோணம் கோட்டத்தில் :-


திருநெல்வேலி  கோட்டத்தில் :-