Friday, June 27, 2014

CIRCLE UNION ADDRESSED GENERAL SECRETARY ON UNMINDFUL DEPUTATIONS FOR TRAININGS

 அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

மத்திய அரசால் அறிவிக்கப் பட்ட  NATIONAL  TRAINING  POLICY  2012 இன் படி   அஞ்சல் துறையில்   POSTAL  TRAINING  POLICY  2012 வகுக்கப் பட்டது. அதன் சாரம் :-

The National Training Policy (2012) says that “all civil servants shall be  provided with training to equip them with competencies for their current or future  jobs " 

"Centres of excellence will be created for training, research and development of  postal ICT products so as to support the development of customized Information Technology (IT) applications for the department. These Centres will be the Engine of  Change Management. To facilitate faster adoption of changes by employees,  particularly in the wake of IT Modernization Project ‘India Post 2012’, the ideas and concepts of Change Management shall be made an integral part of all trainings, organized in Postal Training Centres/RAKNPA, by incorporating a Standardized Module on the subject and all such issues which in turn will help the employees of the department to grow and become true professionals to render good quality services to customers."

ஆனால் இங்கு நடப்பதோ வேறு !  பொது மக்கள் சேவையை சீரழித்து ஒரே நாளில் ஒரே கோட்டத்தில்  ஒவ்வொரு  பயிற்சிக்கும் 10 பேர் என்று நினைத்து நினைத்து  பயிற்சிக்கு அனுப்பும் அவலம் ! . 

ஒரே பயிற்சிக்கு ஒரே நபர் பல முறை அனுப்பப் படும்  கேலிக் கூத்து ! . 

அஞ்சலகத்தில் ஆள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? மக்கள் சேவை நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன ?   " செருப்புக்கு ஏற்றாற் போல் காலை வெட்டு " என்று பயிற்சி மையத்திற்கு ஆள் கொடுக்கும்  இடமாக  அஞ்சலகம் மாற்றப் பட்டது கேவலம்! 

இது தவறு !  இலாக்கா சேவை சீரழிகிறது  என்று  இலாக்காவின் மேல் உண்மையான பற்றுடன் நாம் கேட்டால் , இது  அரசின் கொள்கை முடிவு என்றும்   மேல் மட்ட உத்திரவு என்றும்  மண்டல , மாநில அதிகாரிகள்  கூறும் போக்கு  வேடிக்கையே .  

இலாக்கா  என்ன ஒரே அஞ்சலகத்தில் இருந்து  பத்து பேரை ஆள் இல்லாத TRAINING  CENTRE  க்கு எல்லாம் ஆள் அனுப்பு என்றா சொல்கிறது ?  .

பயிற்சி தருவதன் நோக்கம் சிறப்பான சேவையை உருவாக்கவே ! 
இருக்கும் சேவையை சீரழிக்க அல்ல! எல்லோரையும் ஒரே நேரத்தில் பயிற்சிக்கு அனுப்பு! அஞ்சலகத்தை இழுத்து மூடு  என்பதல்ல !  

கொள்கை முடிவு அறிவிப்பது  அரசும் இலாக்காவும் தான்  என்பது உண்மை . ஆனால் அதனை சரியான திசையில் வழி நடத்தி அதன் பயன் இலாக்காவுக்கும் பொது மக்களுக்கும் கிடைக்கச் செய்வது  EXECUTIVE  AUTHORITY  தானே ? எனக்குத் தெரியாது என்று தட்டிக் கழிப்பது எந்த வகையில் சரியாகும் !  

கேட்டுப் பார்த்தோம் . சொல்லிப் பார்த்தோம் . விவாதித்துப் பார்த்தோம் . சரியாகவில்லை . ஊழியர்கள் படும்  அவலம் எவர் காதிலும் கேட்கவில்லை ! 

எனவே  நமது பொதுச்  செயலரிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளோம்.  இந்தப் பிரச்சினையை உடன்  இலாக்கா  முதல்வரிடம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளோம் ! பிரச்சினை தீரும் என்று நம்புகிறோம். தீரவில்லையானால் களம் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை . அதற்கு வழி காட்டட்டும் நம் அகில இந்தியச் சங்கம் .  கீழே பார்க்க மாநிலச் செயலரின் கடித நகலை :-