Monday, June 23, 2014

TIRUVARUR BRANCH CONFERENCE A GRAND SUCCESS

அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு  இணைந்த  
22 ஆவது திருவாரூர் கிளை மாநாடு

அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு சங்கங்களின் இணைந்த திருவாரூர் கிளைகளின் 22 ஆவது மாநாடு  கடந்த 22.06.2014 அன்று காலை  சுமார் 10.00 மணியளவில் , திருவாரூர் தலைமை அஞ்சலக திறந்தவெளி அரங்கில்  சிறப்பாக நடைபெற்றது.  காலை சம்மேளனக்  கொடிஏற்று நிகழ்வுடன்  மாநாடு இனிதே  துவங்கியது . மாநாட்டு நிகழ்வுகளுக்கு அஞ்சல் மூன்றின் கிளைத் தலைவர் தோழர் R . சுப்பிரமணியன்  மற்றும் அஞ்சல் நான்கின் தலைவர் தோழர். S . தியாகராஜன் ஆகியோர்  கூட்டுத் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினர்.   மாநாட்டில் ஈராண்டு அறிக்கை சமர்ப்பித்தல் , வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தலுக்கு பிறகு  நடப்பு ஈராண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு  போட்டியின்றி ஏகமனதாக  நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்தலை அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  தோழர். J . R . அவர்கள்  நடத்தி வைத்தார். 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகள் :-
அஞ்சல் மூன்று 

கிளைத் தலைவர் : தோழர். R . சுப்பிரமணியன் , PM  Gr .I , ஆரூர் வடக்கு.

கிளைச் செயலர் : தோழர். K . இராமலிங்கம் , P .A ., திருவாரூர் HO 

நிதிச் செயலர் : தோழர் . V . ஜோதிமணி, P .A ., திருவாரூர் H .O .

அஞ்சல் நான்கு 

தலைவர் : தோழர். S . தியாகராஜன்,  PM , TVR  HO 

செயலர் : தோழர். S . பக்கிரிசாமி , PM , TVR  HO 

நிதிச் செயலர் : தோழர். V S . மணிகண்டன், PM , TVR  HO 

நிர்வாகிகள்  தேர்தலுக்குப் பின்னர்  பொது அரங்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் மண்டலச் செயலர் தோழர். S . கோவிந்தராஜன் , அஞ்சல் மூன்றின் நாகை கோட்டச் செயலர் தோழர். S . மீனாட்சி சுந்தரம் , அஞ்சல் நான்கின் நாகை கோட்டச் செயலர் தோழர். P . தசரதன், GDS  NFPE  திருவாரூர் கிளைச் செயலர் தோழர். V .K .B . பிரபாகரன் ,  அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச் செயலர் தோழர் A . கோபாலகிருஷ்ணன் AAO ,  அஞ்சல் நான்கு திருவாரூர் கிளையின் முன்னாள் செயலரும் தற்போதைய ஆரூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலருமான தோழர். மாரியப்பன்,  திருவாரூர் நகர தொழிற்சங்க கவுன்சிலின் செயலர் தோழர். G . குணசேகரன் (BSNL ), பொருளர் தோழர்.  M . சுவாமிநாதன் (TWAD ) , ஆரூர் நகர வங்கி ஊழியர் கூட்டமைப்பின் செயலர் தோழர். M . காளிமுத்து  (AIBEA) , RMS  மூன்றின் மாநில அமைப்புச் செயலர் தோழர் V . தர்மதாஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். 

சிறப்புரையாற்றிய தோழர். J .R .  தனது உரையில் கடந்த 22 ஆண்டு காலமாக தொடர்ந்து உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற்று  கிளைச் செயலராக எதிர்ப்பின்றி பணி  புரிந்து வரும்   அஞ்சல் மூன்று  செயலர் தோழர். ராமலிங்கம் அவர்களின்  சிறப்பான பணி  குறித்தும் , அவரே ஆரூர் நகர தொழிற் சங்க  கவுன்சிலின் தலைவராக  ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக  இருந்து  கிட்டத்தட்ட 46 சங்கங்களை ஒன்றிணைத்து பணியாற்றி வரும் சிறப்பு குறித்தும் பாராட்டிப் பேசினார்.

மேலும் , ஏழாவது ஊதியக் குழுவில்  நமது கோரிக்கைகள், கேடர்  சீரமைப்பில் நாம் பெற்ற ஒப்பந்தம் , இலாக்காவின் இன்றைய நிலை , தொழிற்சங்கத்தின்  கடமை , மாநிலச் சங்கம் தீர்த்து வைத்த பிரச்சினைகள் , இடைக்கால நிவாரணம்  மற்றும் பஞ்சப் படி இணைப்பு  குறித்து  நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் , GDS  ஊழியர் கோரிக்கைகளுக்காக  நடைபெறவுள்ள தொடர் போராட்டங்கள் குறித்து விளக்கமாக  நீண்ட எழுச்சி உரையாற்றினார்.  இறுதியில்  கிளைச் செயலர் தோழர். ராமலிங்கம் நன்றி கூற மாநாடு  இனிதே  நிறைவுற்றது. 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.