அன்புத் தோழர்களுக்கு வணக்கம். மத்திய, மேற்கு மற்றும் சென்னை பெருநகர மண்டலங்களில் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டிக்கான தேதி அறிவிக்கப் பட்டு அதன் விபரம் நம் அஞ்சல் மூன்று சங்க வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டுள்ளன. ஆனால் தென் மண்டலத்தில் மட்டும் பேட்டிக்கான தேதி அறிவிக்கப் படவில்லை .எனவே மாநிலச் சங்கத்தின் சார்பாக கீழே காணும் கடிதத்தை நாம் தென் மண்டல அதிகாரிக்கு அனுப்பினோம். இதன் விளைவாக தேதி குறிப்பிடப் படாமல் ஜூலையில் நடைபெற உள்ள BMM க்கு உடன் SUBJECTS அனுப்புமாறு நமக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.