Thursday, June 5, 2014

LETTER FROM SECRETARY, STAFF SIDE NATIONAL COUNCIL JCM TO FINANCE MINISTER FOR D.A. MERGER

 01.01.2014 முதல் விலைவாசி உயர்வின் அடிப்படையில் பஞ்சப்படியானது 100% ஐ எட்டியுள்ளது . தற்போதுள்ள  சூழலில்  ஏப்ரல் வரை வெளியிடப் பட்டுள்ள விலைவாசிக் குறியீட்டு  எண்  அடிப்படையில் வைத்துப் பார்த்தாலே  எதிர்வரும் 01.07.2014 முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படி என்பது 107% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்  100% பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திடவேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாகும்  . 

இந்த பஞ்சப்படி இணைப்பு என்பது மூன்றாவது, நான்காவது  மற்றும் ஐந்தாவது ஊதியக் குழுக்களிலும் - ஏன், ஆறாவது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கு முன்னரும் கூட நடந்துள்ளது.

ஆனால் தற்போது  அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதியாக உள்ள தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின்  செயலர் தோழர். சிவ கோபால் மிஸ்ரா அவர்கள் மத்திய நிதி அமைச்சர் திரு . அருண் ஜெட்லி அவர்களிடம் 50% பஞ்சப்படி இணைப்பையாவது வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தோழர். சிவ கோபால் மிஸ்ரா  ரயில்வே துறையில் இயங்கி வரும் மிகப் பெரும் சம்மேளனமான AIRF  இன் பொதுச் செயலாளரும் கூட.  பஞ்சப்படி இணைப்பை  புதிய அரசு  அளிக்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம் . கீழே பார்க்கவும்  ஊழியர் தரப்பு செயலரின் கடித நகலை:-