Friday, June 13, 2014

NFPE TN CO-ORDINATION COMMITTEE LETTER TO CHIEF POSTMASTER GENERAL TN ON SOUTHERN REGN / AUDIT OFFICE ISSUES

இன்று (13.06.2014)  சென்னை DPA  வளாகத்தில்  GM  FINANCE  அவர்களின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து முழு நாள்  தார்ணா  போராட்டம் நடைபெற்றது.  போராட்டக் கூட்டத்திற்கு  அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும் , கணக்குப் பிரிவின் அகில இந்தியத் தலைவர் தோழர்  சந்தோஷ் குமார் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினர்.   

AIPAEA  சங்கத்தின் பொதுச் செயலர் தோழர்.  T. சத்தியநாராயணா ,  NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர் S . ரகுபதி ,  அஞ்சல் -RMS  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் கன்வீனர் தோழர்  J . ராமமுர்த்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ் மாநில பொருளர்  தோழர். சுந்தரமூர்த்தி ,  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர்  தோழர். ரவிச்சந்திரன் RMS  நான்கின் மாநிலத் தலைவர்  தோழர். தேவன் , SBCO  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். அப்பன்ராஜ், AIPEU  GDS  NFPE  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். தனராஜ்   ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார் . இறுதியாக கணக்குப் பிரிவு அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R . B . சுரேஷ் அவர்கள் நன்றி தெரிவித்து  பேசினார்.  கணக்குப் பிரிவு அலுவலர் சங்க மாநிலச் செயலர் தோழர். B . சங்கர் சிறப்பாக  ஏற்பாடுகளை செய்திருந்தார் . முழு நாள் தார்ணா  போராட்டத்தில் கிட்டத்தட்ட 150 ஊழியர்கள் கலந்துகொண்டது  போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தியது.

மாலை சுமார் 04.30 மணியளவில்  தமிழ் மாநில  இணைப்பு குழு சார்பாக DPA  மற்றும் தென் மண்டலப் பிரச்சினைகள் குறித்து  CPMG  அவர்களுடன் பேசி  நம் நிலையை தெளிவாக விளக்கி,  பிரச்சினைகள்  தீர்க்கப் படவில்லையெனில் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து சங்கங்களின் தொடர்  போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கும்   கடிதத்தை  அளித்திட  கன்வீனர்  தோழர்.  J . R . , RMS  மூன்றின் மாநிலச் செயலர் தோழர் K . சங்கரன், கணக்குப் பிரிவு சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். B . சங்கர் ஆகியோர் அடங்கிய குழு    CPMG அலுவலகம் சென்றது . 

CPMG  அவர்கள்  தலைமையிடம் திரும்பாத காரணத்தால்  DPS  (HQ ) அவர்களை நேரில் சந்தித்து ,  பிரச்சினைகளை விவாதித்து  கடிதத்தை அளித்தனர்.  DPS  (HQ ) அவர்களும் பிரச்சினைகளின்  தீவிரத்தை முழுமையாகப்  புரிந்து கொண்டார் . நிச்சயம் உடனடியாக இந்தப் பிரச்சினைகள் குறித்து  CPMG  அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  சந்திப்பு நிகழ்வு சுமுகமாக  நடைபெற்றது .

போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் மற்றும் தோழியர்களுக்கு தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பில் வீர வாழ்த்துக்கள் ! தென் மண்டலத்தில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்ற விபரம் முழுமையாக நமக்குக் கிடைக்கப் பெற்றவுடன்  புகைப்படங்களுடன்  செய்தி வெளியிடப்படும். மாநில இணைப்புக் குழுவின் கடித நகல்  கீழே  காண்க:- :-