நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முயற்சியால் சென்னை பெருநகரமண்ட லத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த சில ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டன .
இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் எடுக்கப் பட்டதன் விளைவாக கீழே கண்ட பிரச்சினை தீர்க்கப் பட்டது .
1. ராணிபேட்டை அஞ்சலக குடியிருப்பு பிரச்சினையில் தோழியர் அம்சாபாய் அவர்களுக்கு ஏற்கனவே வீட்டு வாடகைப் படி வழங்கப்பட்டதை AUDIT உத்திரவின்படி பிடிக்கப் பட்டது . தற்போது இது ரத்து செய்யப் பட்டு SUSPENSION OF QUARTERS க்கு உத்திரவிடப்பட்டு , பிடிக்கப்பட்ட தொகையான சுமார் ரூ. 35000/- திரும்ப அளிக்க உத்திரவிடப்பட்டது.
2. இது போல அதன் கிளைத்தலைவர் தோழர். G . மணி அவர்களுக்கும் இதுபோல SUSPENSION OF QUARTERS உத்திரவிடப்பட்டு வீட்டு வாடகைப் படி பிடித்தம் செய்ய உத்திரவிடப்பட்டது ரத்து செய்யப்பட்டது. இந்த உத்திரவினை இட்ட PMG , CCR அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது போல , பல ஆண்டுகளாக வழங்கப் படாமல் இருந்த உயர் வீட்டு வாடகைப்படி தென் சென்னை//தாம்பரம் கோட்டத்தில் கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு நிலுவைத் தொகையுடன் வழங்கிட உத்திரவு இடப்பட்டுள்ளது. ( 09.11.2010 முதல் வழங்கப்படும்- கீழே பார்க்க உத்திரவு நகலை )
தென் சென்னை :-
1. சோளிங்கநல்லூர் 2. பாலவாக்கம் 3. காரப்பாக்கம் 4. ஒக்கியம் துரைபாக்கம் 5. ஈஞ்சம்பாக்கம்
தாம்பரம் :- 1. பள்ளிக்கரணை
தாம்பரம் :- 1. பள்ளிக்கரணை
இந்தப் பிரச்சினை நம் மாநிலச் சங்கத்தால் ITEM NO . 31 இன் படி RJCM இல் பிரச்சினையாக வைக்கப் பட்டு மேல் நடவடிக்கைக்காக CPMG இடம் பதிலும் பெறப்பட்டு, அந்த பதிலின் நகல் ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நம் அகில இந்திய சங்கத்திற்கும் இந்த பிரச்சினை எடுக்கப்பட்டு DIRECTORATE உத்திரவும் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து கடிதம் எழுதி உத்திரவை பெற்றுத் தந்த நம் அகில இந்திய சங்கத்திற்கும், தொடர்ந்து இந்தப் பிரச்சினையை தீர்த்திட முயற்சிகள் மேற்கொண்ட PMG , CCR அவர்களுக்கும் நம் நன்றி உரித்தாகும்.